நடனம்

கலைகளை நாம் காலத்தின் கண்ணாடி என்று கூறுவோம். தமிழர் கலைகளிலே தொன்மையான கலையான பரதம் ஆனது தொல்காப்பியரின் காலத்தில் கூத்து, நாடகம், நாட்டியம், ஆட்டம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது.

தொல்காப்பியத்தில் இலக்கணம் கண்டு, சிலப்பதிகாரத்தில் சிறப்புநிலை எய்தியது எம் நாட்டியக் கலை. பரதநாட்டியம், ஆண் பெண் இருவரும் ஆடும் ஓர் கலையாகும்.முற்காலத்தில் பெண்களே அதிக அளவில் ஆடி வந்தனர். ஆனால், தற்காலத்தில் ஆண்களும் அதிக அளவில் ஆடி வருகின்றார்கள்.

நடனம் தொடங்கு முன் தட்டிக்கும்பிடுவார்கள். “தட்டிக்கும்பிடுதல்என்றால் பூமாதேவியை மிதித்து ஆடுவதால், பூமாதேவிக்கு வணக்கம் செலுத்தி, ஆசிரியரையும் பெரியவர்களையும் வணங்குவதாகும்.

பரதநாட்டியத்தில் காலில் அணியப்படும் சலங்கை மிக முக்கியமாகும். இந்த சலங்கை வெண்கலம், செம்பு, வெள்ளி ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றால் செய்யப்பட்டு நல்ல நாதமுடையதாக இருக்கும். உடல் இயங்குவதற்கும், மனம் இயங்குவதற்கும் உதவும் கலை நாட்டியக்கலையாகும்
.
எமது மாணவர்கள் நடனக் கலையை கற்று அரங்கேறியது மட்டுமல்லாது, அடுத்த தலைமுறையினருக்கும் பயிற்றுவிக்கும் அளவிற்கு ஆசான்களாக வளர்ந்திருப்பது எமது கலைக்கூடத்தை பெருமை கொள்ள வைக்கிறது.நாேர்வே நாட்டில் இடம்பெறும் பல்லின கலாச்சார விழாக்களில் எம் மாணவர்களின் நடனங்கள் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளததையும் பெருமையாக கூற முடியும். எமது பண்பாட்டோடு ஒன்றிவிட்ட கலைவடிவங்களில் நடனம் காத்திரமான இடத்தைப் பிடித்துள்ளது என்றால் அது மிகையாகாது.

பரதநாட்டியம்
2023_ITAC-Bharatanatyam-Grade3
2023_ITAC-Bharatanatyam-Grade4
2023_ITAC-Bharatanatyam-Grade5
2023_ITAC-Bharatanatyam-Grade6

2023_ITAC-Bharatanatyam-Grade7