அனைவருக்கும் வணக்கம்,
நத்தார்விழா 2023 இற்கான நிகழ்ச்சிநிரல் இணைக்கப்பட்டுள்ளது.
இணைப்பைப் பார்க்கவும்.
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
வணக்கம்!
இணைப்புகளைப் பார்க்கவும்:
பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 49-2023
உள்ளடக்கம்
-கல்வி & கலை – 09.12.2023
அரையாண்டுத் தேர்வு 2023 இற்கான எழுத்துத் தேர்வு 09.12.2023 நடைபெறும்.
எழுத்து தேர்வு நடைபெற இருப்பதால் இடைவேளையின் போது மாணவர்கள் வெளியில் செல்ல அனுமதியில்லை. மாறாக உங்கள் பிள்ளைகளுக்கான சிற்றுண்டி உணவுகளை உங்கள் வகுப்பு பிரதிநிதிகள் ஊடாக கொடுத்தால் அவர்கள் உரிய மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.
-நத்தார் விழா 2023
-மாவீரர் நினைவாக நடத்தப்பட்ட ஓவியப்போட்டி 2023 முடிவுகள்
-நிர்வாகத் தெரிவுக்குழு 2024
-அன்னை தமிழ்முற்றப் போட்டிகள் 2024
-தேநீர்ச்சாலை.
-பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் முக்கிய கவனத்திற்கு!
-தைப்பொங்கல் விழா 2024 (13.01.2024)
-நிதி 2023
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
அன்னை தமிழ்முற்றப் போட்டிகள் 2024
ஒலிவடிவம்
மாணவர்களுக்கான போட்டிகள் தொடர்பான விவரங்கள் வருமாறு:
• சிறுவர் பிரிவு – கதை சொல்லும் போட்டி ( 2018 பிறந்தோர்).
• ஆண்டு 1 முதல் 7 வரையான மாணவர்களுக்கான பேச்சுக்கள் ஆண்/பெண் இருபாலாருக்கும் இடம்பெறும்.
• ஆண்டு 4 முதல் 10 வரையான மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் ஆண்/பெண் இருபாலாருக்கும் இடம்பெறும்.
வளாகங்களில் நடாத்தப்படும்.
சிறுவர் பிரிவு – கதைசொல்லும் போட்டி (2018), பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி என்பனவற்றில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்கள், தேசிய ரீதியாக நடாத்தப்படும் போட்டியில் பங்குகொள்ள தகுதி பெறுவர்.
போட்டிகளில் பங்குகொள்ளும் போட்டியாளர்கள் குடும்பப் பெயர் மற்றும் வளாகத்தின் பெயரை போட்டியில் பங்குபெறும்போது பயன்படுத்தக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
வளாகங்களில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்களின் விபரங்களை எதிர்வரும் 10.03.2024 இற்கு முன்பாக அனுப்பவேண்டியுள்ளதால் எதிர்வரும் 03.02.2024 இற்கு முன் மாணவர்களை போட்டிகளுக்குத் தயார் செய்யுமாறு வேண்டுகின்றோம்.
இப்போட்டிகள் இடம் பெறும் காலம், நேரம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
அந்தந்த வகுப்புகளுக்கான பேச்சுப்பகுதி மற்றும் திருக்குறள்கள் இணைக்கப்பட்டுள்ளது.
இம்முறையும் பல மாணவர்கள் பங்கேற்பார்கள் என நம்புகின்றோம்.
கீழே காணும் இணைப்பை அழுத்தி பிறந்த ஆண்டின் அடிப்படையில் பேச்சு அல்லது குறளை தரவிறக்கம் செய்யவும்.
பேச்சு 2024
திருக்குறள் ஒப்பித்தல் 2024
நன்றி.
இவ்வண்ணம்
கல்வி – நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்.
வணக்கம்!
இணைப்புகளைப் பார்க்கவும்:
பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 48-2023
முக்கிய அறிவிப்பு!
இவ்வாரம் சனிக்கிழமை அன்று ஓசன் பாடசாலையில் சில திருத்த வேலைகள் செய்யவிருப்பதால் எமது பாடசாலையை நடாத்தமுடியாது என தகவல் கிடைத்துள்ளது.
பதிலாக வெள்ளிக்கிழமை 01.12.2023 18:00 – 21:00 வரை நடாத்துவதாகத் தீர்மானித்துள்ளோம்.
அந்த வகையில் கற்பித்தல் நேரங்கள் பற்றிய தகவல் கீழே!
01.12.2023 வெள்ளிக்கிழமை பாடசாலையின் கற்பித்தல் நேரவிபரம்:
பிரிவு 1
தொடக்கநிலை – 7 ஆம் வகுப்பு வரை
பாடசாலை நேரம்: 18:00 – 20:00
பிரிவு 2
8 – 10 ஆம் வகுப்பு வரை
பாடசாலை நேரம்: 18:00 – 21:00
இரண்டு பிரிவுகளுக்கும் பொதுவான இடைவேளை நேரம் 18.55 – 19.25 வரை.
உள்ளடக்கம்
-கல்வி & கலை – 01.12.2023
-அரையாண்டுத் தேர்வு 2023
-நத்தார் விழா 2023
-மழலையர் முற்றம்.
-தேநீர்ச்சாலை.
-பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் முக்கிய கவனத்திற்கு!
-தைப்பொங்கல் விழா 2024 (13.01.2024)
-நிதி 2023
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
நத்தார் விழா 2023
இடம்: சென் பாடசாலை மண்டபம்
முகவரி: Hasselveien 4, 1470 Lørenskog
காலம்: 16.12.2023 சனிக்கிழமை
நேரம்: 10:00 மணி
எமது கலை, பண்பாடு, கலாசார விழுமியங்களை புலம்பெயர்தேசங்களில் எம் இளையவர்களும் பேணிக்காத்து மகிழ்வுடன் வாழ்ந்திட வழிசெய்யும் வகையில் தமிழர் விழாக்களையும் வாழிடநாட்டுக்குரிய சில முக்கிய விழாக்களையும் நாம் ஆண்டுதோறும் எமது வளாகத்திலும் நடாத்திவருவது தாங்கள் அறிந்ததே.
இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி.
இங்ஙனம்
கலை – நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் – லோறன்ஸ்கூக் வளாகம்
லோறன்ஸ்கூக் நகரசபையினரல் ஆண்டுதோறும் வழங்கப்படும் தன்னார்வ விருதிற்காக இவ்வாண்டு 2023 அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடப் பணியாளர் 4போட்டியாளர்களில் ஒருவராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
வெற்றியாளர் தெரிவு 05.12.2023 லோறன்ஸ்கூக் தன்னார்வ நாள் அன்று இடம்பெறும்.
தனுசியா சென் யோன்ஸ் அவர்கள் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் தனது தன்னார்வப் பணிக்காகவும், அந்நிறுவனத்தில் தொடர்புடைய குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகவும் கலாச்சாரப் பணியில் ஆர்வமுள்ள பிற இளைஞர்களுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டார்.
2021 ஆம் ஆண்டு முதல் நிர்வாகக் குழு உறுப்பினராக, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான முடிவெடுப்பு மற்றும் மூலோபாயத் திட்டமிடல் ஆகியவற்றில் தனுசியா தீவிரமாக பங்கேற்று வருகிறார்.
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம், தாய்மொழி கற்பித்தல், உயர்கல்வித் தேர்வுக்கான படிப்புகள், வீட்டுப்பாட உதவி மற்றும் கலாச்சார செயல்பாடுகளை வழங்குகிறது. மற்றும் 206 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் ஆதரவான வழிகாட்டியாக அவரைப் பயன்படுத்துகின்றது. கடந்த 29 அக்டோபர் 2023 அன்று Kjenn பள்ளியில் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பல தன்னார்வ பங்களிப்பாளர்களுடன் ஒரு பெரிய பல்லின கலாச்சார நிகழ்வின் முக்கிய ஊக்குவிப்பாளராகவும் செயல்பட்டவர். இந்நிகழ்விற்கு பன்முகத்தன்மை மற்றும் நகராட்சியில் தன்னார்வத் தொண்டு மூலம் மேற்கொள்ளப்படும் நல்ல பணிகளை முன்னிலைப்படுத்திவருகின்ற அனைத்து தன்னார்வ நிறுவனத்தினரும் அழைக்கப்பட்டனர். அன்னை பூபதியில் மட்டுமின்றி Ungdom og fritid Viken இன் குழு உறுப்பினராகவும் தனுசியா பங்களிக்கிறார். அவருக்கு 23 வயது மற்றும் தற்போது நோர்வேஜிய மொழியில் விரிவுரையாளராகப் படிக்கிறார், மேலும் ஓய்வு நேரக் கழகத்திலும் (Fritidsklubb), நோர்வேஜிய பள்ளிக்குப் பின் நடைபெறும் SFO மற்றும் முன் பள்ளியிலும் Barnehage விலும் பணி அனுபவம் பெற்றவர்.
தனுசியாவை வாழ்த்துவதில் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் பெருமை கொள்கின்றது.
இவ்வாறு இளையவர்களை ஊக்குவிக்கும் பெரும்பணியில் அனைவரும் முன்னின்று ஊக்கம்கொடுத்து அவர்களுக்கான சிறந்த தளங்களை உருவாக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லொறன்ஸ்கூக்
Kandidater til Lørenskog frivillighetspris 2023 – Lørenskog kommune (lorenskog.kommune.no)