தமிழ்மொழியை தேர்வுப்பாடமாக எடுக்கும் மாணவர்களுக்கு! / For studenter som tar tamil som valgfag!
நோர்வே தமிழ் முற்றம்
இக்கல்வியாண்டுக்குரிய வழமையான பெற்றோர் தகவல் கூட்டம் 31.08.24 சனிக்கிழமை 09:45 மணிக்கு நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ளவும்.
அன்புடன்
றொம்மன் வளாக நிருவாகம்.
வணக்கம் அன்பார்ந்த பெற்றோர்களே!
கோடைகால விடுமுறையை இன்பமாக கழித்திருப்பீர்கள் என நம்புகின்றோம்.
மீண்டும் புதிய கல்வியாண்டு ஆரம்பமாகிறது. இக்கல்வியாண்டு முதலாவது தவணை வகுப்புகள் 23.08.24 வெள்ளிக்கிழமை 17:30 மணிக்கும், 24.08.24 சனிக்கிழமை 09:30 மணிக்கும் , 11 ,12ம் வகுப்புகள் வழமைபோல் 25.08.24 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை 15:30 மணிக்கும் நடைபெறவுள்ளது.
புதிய மாணவர்கள் இந்நாள்களில் அரைமணி நேரம் முன்னதாக வருகைதந்து பதிவுசெய்து இணைந்து கொள்ளலாம். அனைவரையும் அன்புடன் புதிய கல்வியாண்டில் வரவேற்றுக்கொள்கிறோம்.
அன்புடன்
றொம்மன் நிருவாகம்
அனைத்துலக தேர்வு 01.06.2024 நேர அட்டவணை
18.05.24 ம் திகதி சனிக்கிழமை 10:00 மணிக்கு பாடசாலையில் 2 ம்மாடி மண்டபத்தில் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும். அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் பாடசாலை சிற்றுந்துத்தரிப்பிடத்தில் அமைக்கப்பட்ட கொட்டகையில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படும். அதன் பின்னர் சனிக்கிழமை நடைபெறும் தமிழ், கலை வகுப்புகள் எதுவும் நடைபெறமாட்டாது.