அன்னைத் தலைமை நிருவாகமானது ஏழு நிருவாக உறுப்பினர்களை உள்ளடக்கியது. இது நோர்வேயில் இயங்கும் அனைத்து வளாகங்களையும் ஒருங்கிணைத்து செயற்படும் செயற்பாட்டு வடிவம் கொண்டது. வளாகங்களின் தேவைகளைக் கேட்டறிந்து, தேவைகளைப் பூர்த்தி செய்யும் செயற்பாட்டைத் தன்னகத்தே கொண்டது. கல்விக்குழு, கலைக்குழு என்பன தலைமை நிருவாகதின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் புரிந்துணர்வுடன் செயற்படும். இக் குழுக்கள் தாம் இனம் காணும் புதிய திட்டங்களை விவாதித்து, அன்னைத் தலைமை நிருவாகத்தின் ஒத்திசைவுடனும், அனுசரணையோடும் நடைமுறைப்படுத்தும். அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நிருவாகத்தினர் மேற்கொள்வர்.

வளாகங்களின் பரிந்துரையோடு வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் சுழற்சி முறையில் அன்னைத் தலைமை நிருவாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

 

யாப்பு

வளாகங்களின் யாப்பு வடிவம்