வயலின் இசை தனித்துவமானது. பொதுவாகத் தமிழ்ப் பண்பாட்டு அரங்க நிகழ்வுகளில் வயலின் முக்கிய கருவியாகப் திகழ்கின்றது. வாயால் பாடப்படும் பாடல்களைத் தத்துருவமாக வயலின் இசையில் கேட்கும் போது ஏற்படும் பரவசம் அலாதியானது. மேலைத்தேய இசையில் நின்றபடி வாசிக்கும் இவ் இசைக் கருவியானது எமது பண்பாட்டில் சப்பணம் கட்டி பலமணி நேரம் உட்கார்ந்த நிலையில் வாசிப்பதும் மிகப் பெரிய சவாலாகும். நான்கு தந்திகளைக் கொண்ட மரத்திலானா இக் கருவி பலவித உணர்வுகளை ஏற்படுத்தும் மந்திர சக்தி கொண்டது என்று குறிப்பிடலாம். வயலின் இசையையும் கலையார்வத்தோடு நம் இளையோர் கற்று வருகின்றனர்.