தமிழ்மொழிக் கல்வி தொடர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட தலைமை
[மேலும்]
தமிழ்மொழிக் கல்வி தொடர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட தலைமை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது!
*மொட்டன்சுறூட் வளாக பெற்றோர்களின் கவனத்திற்கு!*
அன்புடையீர்,
மாணவர்களின் தமிழ்மொழிக் கல்வியை நீங்கள் வாழும் இடத்திற்கு அருகாமையில் தொடர்ந்து வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத் தலைமை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் அறியத்தரப்படும்.
முதற்கட்டமாக, மாணவர்களின் கற்றல் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கான கல்வியை ஒழுங்குபடுத்துவதற்கு ஏதுவாக கீழ்க் காணும் இணைப்பை அழுத்தி உங்கள்
பதிவுகளை மேற்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது பாடசாலை நடைபெறும் இடத்திலேயே பாடசாலையை முன் எடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுததிருந்தோம். ஆயினும் 15 ஆண்டுகளாக அந்தப் பாடசாலையுடன் எமக்கு இருந்த ஒப்பந்தத்தைச் சில குழப்பவாதிகளின் இடையூறால் நிறுத்தப்பட்டுள்ளது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மிகக் குறுகிய காலத்திற்குள் நேரடி வகுப்புகளை அதே பகுதியில் தொடர்ந்து நடத்துவதற்கான அவசரச் செயற்பாடுகளை எமது நிறுவனம் முன்னெடுத்துவருகின்றது. தங்கள் பிள்ளைகளின் தமிழ்மொழிக் கல்வியைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு பதிவுகளை மேற்கொள்ளுமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
*“தமிழ் எங்கள் அடையாளம்”*
அன்புடன்,
தலைமை நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்
Alle nødvendige tiltak er satt i verk av ledelsen ved Annai Poopathi Tamilsk Kultursenter for at tamilundervisningen skal kunne fortsette!
Til foreldre ved Annai Mortensrud avdeling.
Kjære foreldre,
Ledelsen ved Annai Poopathi Tamilsk Kultursenter arbeider med å legge til rette for at elevene skal kunne fortsette sin tamilundervisning i nærheten av der dere bor. Mer informasjon om dette vil bli gitt så snart som mulig.
Som et første tiltak, og for å sikre kontinuitet i elevenes læring, ber vi dere vennligst om å registrere deres barn ved å trykke på lenken nedenfor. Dette vil gjøre det mulig for oss å planlegge og organisere undervisningen på en best mulig måte.
Vi hadde i utgangspunktet satt i gang tiltak for å fortsette undervisningen i de samme lokalene som skolen benytter i dag. Dessverre må vi med beklagelse informere om at avtalen vi har hatt med denne skolen i 15 år, er blitt avsluttet på grunn av forstyrrelser og innblanding fra enkelte personer.
Vår organisasjon arbeider nå med hasteordninger for å kunne starte opp fysisk undervisning i det samme området igjen innen svært kort tid.
Vi ber derfor innstendig og med tillit til deres støtte om at dere registrerer deres barn, slik at deres tamilundervisning kan fortsette uten unødvendige avbrudd.
For mer informasjon og kontakt med oss på epost
Takk for deres forståelse og støtte.
«Tamilsk er vår identitet»
Med vennlig hilsen,
Sentralstyret
Annai Poopathi Tamilsk Kultursenter (APTK)