“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்”
திருவள்ளுவர் கூட குழலினிது என்று புல்லாங்குழலின் பெருமையைக் குறளில் பதிவு செய்துள்ளார். புல்லாங்குழல் மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. மூங்கில் குழல்களாலான இக்கருவி பல விதமான ஒலிகளை எழுப்ப வல்லது. புல்லாங்குழலில் பல பிரிவுகள் உண்டு. சுருதிக்கேற்ப குழல்கள் வேறுபடும், மாறுபடும். அனைவரையும் மயக்கும் தன்மை புல்லாங்குழலுக்கு உண்டு. குறிப்பாக அரங்க நிகழ்வுகளில் புல்லாங்குழனின் வகிபாகம் அலாதியானது. செவிக்கினிமையான புல்லாங்குழல் தனியாவர்த்தனை இசையினை அதிகாலையில் கேட்பதில் தனிச்சுகம் உண்டு. இன்று எம் இளையோர் சிலர் புல்லாங்குழல் வாசிப்பது மிகவும் நெகிழ்ச்சியானதே!