இளையோர் மத்தியில் பிரபலமான இசைக்கருவி கிற்றார் ஆகும். மேலைத்தேய கீழைத்தேய இசைகளை மீட்க வல்ல இவ்வாத்தியக் கருவியை நரம்பு இசைக்கருவி என்றும் அழைப்பதுண்டு. பொதுவாக ஆறு வித்தியாசமான தடிமன்களைக் கொண்ட கம்பிகளாலான இவ் இசைக்கருவி அதிர்வுகளை ஏற்படுத்தி, ஒலிக்க வைப்பது அற்புதமானது. பொதுவாக மரத்திலான கருவியைப் பயிலும் காலங்களில் பயன்படுத்துவர். அரங்க நிழ்வுகளில் மின்னணு கிற்றார் மூலம் அதிர்கம்பிகள் ஒலியைப் பெருதுபடுத்தி ஒலிக்கச் செய்வர். துள்ளிசையில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இவ் இசைக் கருவியை எம் இளையோர் பலர் கலையார்வத்துடன் கற்றுத் தேர்ந்துள்ளனர். பல இசைக் குழுக்களில் கற்றறிந்த எம் இளையோர் கிற்றாரை இயல்பாகவும் திறமையாகவும் இசைப்பது எம் கலைக்கூடத்திற்கு கிடைத்த பெருமையே.