வீணை
இசைக் கருவிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வீணை. இசைக் கருவிகள் எல்லாமே தனது இசையினால் எல்லோரையும் வசீகரித்தாலும்,வீணையானது தனது தனித்துவமான அழகிய தோற்றத்தினாலும், அதில் செதுக்கி இருக்கும் அழகிய வேலைப்பாடுகளினாலும் எம்மை மேலதிகமாக கவர்ந்திழுக்கக் கூடியது.

கலைமகளின் கையில் இருப்பது இதன் பெருமையை நன்கு புலப்படுத்துகிறது. நரம்புக்கருவி என்று போற்றப்படும் வீணை பலா மரத்தினால் ஆக்கப்பட்டது. இதில் உலோகத்தினால் செய்யப்பட்ட கம்பிகளே பாவிக்கப்படுகிறது. நான்கு தந்திகள் வாசிப்பதற்கும், மூன்று தந்திகள் சுருதிக்காகவும், தாளத்திற்காகவும் அமைந்துள்ளன.

தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையில் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும். சங்கீதத்தின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இதில் தெளிவாக வாசிக்கக் கூடியதாக இருப்பதால் வீணையை ” சங்கீத அளவுகோல்” என்றும் கூறுவர்.
வீணையில் தேர்ச்சி அடைவது மிகவும் கடினம். பல வருடங்கள் பயின்றாலே, அதனை சீராகவும் முறை தவறாமலும் வாசிக்க முடியும். இது சற்று பெரியவாத்தியமாக இருந்தாலும் இன்றும் நமது மாணவர்கள் வீணையை விரும்பி கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதி நாம் பெருமை கொள்கின்றோம்.

 

 

Veena
Veena