மொழி, கலை, பண்பாடு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை அந்த வகையில் எமது மொழியையும் ,கலையையும், பண்பாட்டையும் வளர்ப்பதோடு மட்டுமன்றி கலைப் பாடங்களையும் கற்றுத் தேர்ச்சிபெறவும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் தன் பணியை பல ஆண்டுகளாக நிறைவாக செய்து வருகிறது.

“இசையால் வசமாகா இதயம் எது” இசை, இது உணர்வுகளின் மொழியாகும். உயிரினங்களை தன்பால் ஈர்ந்து இசையவைக்கும் ,இசைக்கல்வியை நம் மாணவர்கள் பயின்று இவ் இசையின் ஊடாக தமிழையும் நம் தமிழ்ப் பண்பாட்டையும் வளர்க்கின்றார்கள்.

எமது கலைக்கூடத்தில் வாய்ப்பாட்டு, தண்ணுமை (மிருதங்கம் ),வீணை, வயலின், புல்லாங்குழல், சுரத்தட்டு, இசை, நடனம் போன்ற கலைப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பல நூறு மாணவர்கள் இக்கலை பாடங்களை கற்று வருகின்றார்கள்.
மேலும் நடனக்குழு , அன்னை இசைக்குழு, இன்னியம்,வாய்ப்பாட்டு (கர்நாடக இசை ) பாடல்குழு என்பனவும் இயங்குகின்றன. இக்குழுக்கள் தமிழர் மத்தியில் மட்டுமன்றி பல்லின கலாச்சார விழாக்களிலும் கலந்து சிறப்பித்து கொண்டிருக்கின்றார்கள். எம் கலைக்கூடத்தில் பயின்ற இளையோர் இன்று ஆசான்களாகவும், கலைஞர்களாகவும் நோர்வேயில் உருவாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் அன்னை வழிகாட்டியாகத் திகழ்கின்றது.
தமிழ் மொழி, கலை, பண்பாடு அனைத்தையும் நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல இக்கலை பாடங்கள் தூண்டுகோலாக அமைவது திண்ணம்.