வாய்ப்பாட்டு சங்கீதம்


இசைக்கருவிகளோடு சேர்ந்து வரும் வாய்ப்பாட்டிற்கு ஈடிணை கிடையாது. பாடல்கள் இசையோடு கலந்து காற்றில் மிதந்து வருகையில் அதைப் பருகுவதில் காணும் பேரின்பம் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது.

மனிதர்கள், மிருகங்கள், பண்டிதர்கள், பாமரர்கள் என்று எல்லோருக்கும் இன்பத்தைத் தரக்கூடியது இக்கலையே ஆகும்.இதைப் பயிலுவதனால் அன்பு, அடக்கம், நட்பு, மனத்திருப்தி,நல்லாெழுக்கம் பாேன்ற நற்குணங்கள் உண்டாகின்றன. சங்கீதத்திற்கு பல தேசத்து மக்களை ஒன்று சேர்க்கும் சக்தி உள்ளது.

தாளம், சுருதி என்பவற்றை பின்பற்றி அதனை தப்பாது பாடுவது என்பது மிக முக்கியமானது. முறையாக வாய்ப்பாட்டை கற்பதன் மூலம் தமது திறமையை வளர்த்துக் கொள்வதுடன், இசையோடு மொழியின் ஆளுமையும் வாய்ப்பாட்டுக்கலை வளர்த்திடும் என்பதில் ஐயமில்லை.

 

vaipaadu