அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூட அங்கத்தவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட உறுப்பினர்களுக்கான தகவல். |
||
02.05.2025 | மாணவர்களுக்கான தேர்வுகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் என்பனவற்றில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கித்தரத் தயாராக உள்ளோம். | lyd |
02.05.2025 | மாணவர்களுக்கான தேர்வுகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் என்பனவற்றில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கித்தரத் தயாராக உள்ளோம். அங்கத்தவர்கள், அங்கத்தவர்களின் பெற்றோருக்கு அன்பான வணக்கம், அன்னை பூபதி வைத்வெத், றொம்மன் மற்றும் திறம்மன் வளாகங்களில் குழப்பநிலையிலும், தடுமாற்றத்திலும், ஏமாற்றப்பட்டும் வெளியேறியுள்ள அல்லது அன்னையுடன் இணைந்து செயற்படாமல் இருக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தேர்வுகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் என்பனவற்றில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கித்தரத் தயாராக உள்ளோம். எனவே மேற்குறிப்பிட்ட வளாக மாணவர்களின் பெற்றோர் எம்மோடு நேரடியாக விரைவாகத் தொடர்பினை மேற்கொள்ளுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம். தேர்வுகள் விவரம்: புலன்மொழித்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு: 1. அனைத்துலகத் தேர்வுகள் 2. அன்னை ஆண்டிறுதிப் பொதுத் தேர்வுகள் மற்றும் விளையாட்டுப்போட்டிகளை வேறு வளாகங்களுடன் இணைந்து நடத்துவதற்கான ஒழுங்குகளை ஏற்பாடுகளைச் செய்துதர அன்னை தலைமை நிர்வாகம் தயாராக உள்ளது. தங்கள் பிள்ளைகளில் நலன்கருதி விரைந்து எம்மோடு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தேர்வுகள் மற்றும் விளையாட்டுப்போட்டிகள் சார்ந்த மேற்கூறப்பட்ட தகவல், நடவடிக்கை எடுக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகளுக்கும் பொருந்தும் என்பதனையும் குறிப்பிட விரும்புகின்றோம். | PDF Tekst |
06.03.2025 | சில நலன்விரும்பிகள் தலைமை நிருவாகத்தினருடன் உரையாடியதற்கு அமைவாக இவ் அறிவித்தலை வெளியிடுகின்றோம்! (norsk versjon på side 2) அங்கத்துவம் நீக்கப்பட்ட மாணவர்கள் வளாகத்தில் கல்விச் செயற்பாட்டை இடையூறின்றித் தொடர முடியும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம். ஏற்கனவே கடந்த வருடம் அங்கத்துவம் நீக்கப்பட்ட மாணவர்கள், தங்கள் கல்வியை வளாகத்தில் தொடருகின்றனர் என்பதனையும் இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகின்றோம். இந் நடைமுறை, நடைமுறையில் இருக்கும் அதேவேளையில்: | |
04.03.2025 | “பெற்றோர்களையும் அன்பான அங்கத்தவர்களே, அங்கத்தவர்களின் பெற்றோர்களே/பாதுகாவலர்களே, ஆசிரியர்களே! பிள்ளைகள் தமிழ்மொழிக் கல்வியை இழந்துவிடக்கூடாது என்ற ஆழமான கரிசனையுடன், அங்கத்தவர்களாக மாணவர்கள் இருப்பதால் அவர்களின் பெற்றோரின் நேர்மையான கரிசனையை எதிர்பார்க்கிறோம். பிள்ளைகளின் எதிர்கால நலனை முன்னிறுத்தி, உரிய பெற்றோர்கள் மிகவும் நிதானமாகச் சிந்தித்து, செயற்பட்டு, எமது வினயமான அழைப்பை உதாசீனம் செய்யமாட்டார்கள் என நம்புகிறோம். ஒரு நிறுவனத்தின் நற்பண்பாக கலந்துரையாடல்களே அமையும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். அத்துடன் சென்ற வருடம் அங்கத்துவம் நீக்கப்பட்ட மாணவர்களும். தமது தமிழ்க்கல்வியைத் தொடர்ந்து அன்னையில் பெற்று வருகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். பெற்றோர்களின் பிடிவாதமும் அவர்களின் அறமற்ற செயற்பாடுகளும் பிள்ளைகளின் தமிழ்க்கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது எனும் உயரிய நோக்குடனே, வளாகம் இவர்களை தொடர்ந்தும் வகுப்பறையில் அனுமதித்து கற்கைச் செயற்பாடுகளைத் தொடர வழி அமைத்தது. சிலர் தொடர்ந்தும் கட்டணங்களைச் செலுத்தாத வண்ணம் இருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. | |
04.03.2025 | “பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் திசை திருப்பி, தவறான தகவல்களை வெளியிடும் சில நபர்களும் ஊடகமும்” அன்பான அங்கத்தவர்களே, அங்கத்தவர்களின் பெற்றோர்களே/பாதுகாவலர்களே, ஆசிரியர்களே! போட்டி ஒன்றுக்கு வைத்வெற் மாணவனை விடவில்லை என்று, அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை நிருவாகம் குழந்தைகள் நலக் காப்பகத்தில் (barnevern) அறிவித்ததாகப் பழி! “காவல்துறை தங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு குழந்தை நலக் காப்பகம் தொடர்பு கொள்ளும் என்று கூறியதாக பெற்றோர் கூறினார்கள் என்று ஆதாரம் அற்ற கதைகளை வைத்துக் கதை அளக்கும் ஊடகம்.” கிழமைதோறும் தமிழ்க் கல்வி கற்பதற்கே பிள்ளைகளைத் திணிக்க முடியாது. இது பிள்ளைகளின் பொழுது போக்கு நேரத்தில் அவர்கள், பெற்றோர்கள் விருப்புடன் தங்கள் தேவை கருதி கலந்து கொள்ளும் நிகழ்வு. அதிலும், போட்டி ஒன்றுக்குப் பிள்ளை வரவில்லை என்று அன்னை அறிவித்ததாம். அதை காவல்துறை கருத்தில் எடுத்து தொலைபேசி எடுத்ததாம். பெற்றோர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாகப் புதிய புனைத் தகவலை வெளியிட்டு அன்னை பூபதி நிறுவனத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நேர்மையற்ற பொய்யான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். . பிள்ளைகள் தமிழ்மொழிக் கல்வியை இழந்துவிடக்கூடாது என்ற ஆழமான கரிசனையுடன், அங்கத்தவர்களாக மாணவர்கள் இருப்பதால் அவர்களின் பெற்றோரின் நேர்மையான கரிசனையை எதிர்பார்க்கிறோம். பிள்ளைகளின் எதிர்கால நலனை முன்னிறுத்தி, உரிய பெற்றோர்கள் மிகவும் நிதானமாகச் சிந்தித்து, செயற்பட்டு, எமது வினயமான அழைப்பை உதாசீனம் செய்யமாட்டார்கள் என நம்புகிறோம். ஒரு நிறுவனத்தின் நற்பண்பாக கலந்துரையாடல்களே அமையும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். அத்துடன் சென்ற வருடம் அங்கத்துவம் நீக்கப்பட்ட மாணவர்களும். தமது தமிழ்க்கல்வியைத் தொடர்ந்து அன்னையில் பெற்று வருகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். பெற்றோர்களின் பிடிவாதமும் அவர்களின் அறமற்ற செயற்பாடுகளும் பிள்ளைகளின் தமிழ்க்கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது எனும் உயரிய நோக்குடனே, வளாகம் இவர்களை தொடர்ந்தும் வகுப்பறையில் அனுமதித்து கற்கைச் செயற்பாடுகளைத் தொடர வழி அமைத்தது. சிலர் தொடர்ந்தும் கட்டணங்களைச் செலுத்தாத வண்ணம் இருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. | |
25.02.2025 | பிள்ளைகளின் தமிழ்மொழிக் கல்விக்கான பெற்றோரின் நேர்மையான கரிசனையை எதிர்பார்க்கிறோம்! அன்பான பெற்றோர்களே, மாணவர்களின் தமிழ்மொழிக் கல்வியில் நாம் அனைவரும் கொண்டுள்ள ஆழமான அக்கறையின் அடிப்படையிலும், இளைய குமுகாயத்தின் எதிர்கால நலனையும் ஆழமாகக் கருத்திற் கொண்டு உறுப்பினர் உரிமைகள் நீக்கப்பட்டவர்களை எமது நிருவாகத்தோடு வந்து கலந்துரையாடுமாறு அழைப்பு விடுகின்றோம். . ஒரு நிறுவனமானது எதிர்காலத் திட்டமிடலுடன் அனைவரையும் கட்டுக்கோப்புடன் நடத்தும் செயலாக்கத்திறன் மிக்கதாக இருப்பது அவசியம். எனவே, முரண்பாடுகளை உரிய முறையில் பேசித் தீர்க்கும் வழிவகைகளைக் கையாள்வது இன்றியமையாதது. மாணவர்களின் தமிழ்மொழிக் கல்வியை கருசனையில் கொண்டு பல தடவைகள் அவர்களை அழைத்துள்ள போதிலும் அவற்றைத் தட்டிக்கழிக்கும் அவர்களது நடவடிக்கை எமக்கு வியப்பாக உள்ளது. பிள்ளைகள் தமிழ்மொழிக் கல்வியை இழந்துவிடக்கூடாது என்ற ஆழமான கருசனையுடன், அங்கத்தவர்களாக மாணவர்கள் இருப்பதால் அவர்களின் பெற்றோர்களுக்கு மீண்டும் ஒர் அன்பான அழைப்பை விடுத்துநிற்கிறோம். | |
13.02.2025 | நிறுவன நடைமுறைகளையும் யாப்பு விதிமுறைகளையும் மீறி நடந்து கொள்பவர்களுக்கும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய நிலையில் உள்ளோம். அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட உறுப்பினர்களுக்கான தகவல். அங்கத்தவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம், (For å lese dette brevet på norsk, se side 2.) நாம் ஏற்கனவே 30.11.2024 திகதியிடப்பட்ட கடிதத்தில் தங்களுக்கு அறியத்தந்ததற்கு அமைய அன்னையின் ஆவணங்கள் சிலவற்றையும் அங்கத்தவர்களின் விவரங்களையும் அன்னை நிறுவனத்திற்குத் தெரியாமல் எடுத்து, தவறாகப் பயன்படுத்தியவர்களுக்கும் நிறுவனப் பண்புகள் சட்டநெறிகளுக்கு மாறாகச் செயற்பட்டுக் கொண்டு, நிறுவன நடைமுறைகளையும் யாப்பு விதிமுறைகளையும் மீறி நடந்து கொள்பவர்களுக்கும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய நிலையில் உள்ளோம். நிறுவன நடைமுறைகளையும் யாப்பு விதிமுறைகளையும் மீறி நடந்து கொள்பவர்களுக்கும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய நிலையில் உள்ளோம். | |
07.01.2025 | தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு அன்னை தலைமை நிருவாகம் சமூக நலன் நோக்கிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை எமது அங்கத்தவர்களுக்கு நாம் தெரிவிக்கின்றோம். அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட உறுப்பினர்களுக்கான தகவல். தமிழீழத் தேசியத் தலைவரின் வழிநடத்தலில் உருவான பல கட்டமைப்புகள் இன்று திசைமாறி செல்வதையும், தேசிய இனமாக இணைந்து பயணிக்க வேண்டியவர்கள் சிதைந்து சமூகச் சீரழிவை நோக்கி செல்வதும் ஆபத்தானது என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுவதோடு, இந்நடவடிக்கையை நாம் தொடர்ந்தும் கைகட்டி பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனவே சமூக அக்கறையுடனும், தார்மீகப் பொறுப்புடனும் நடந்து கொள்வதுடன், நோர்வே வாழ் தமிழர்களின் எதிர்காலம் சார்ந்து சிந்தித்துப் பயணிக்க வேண்டிய அகத்தியமான காலத்தில் நிற்கிறோம். இவற்றைக் கருத்திற்கொண்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு அன்னை தலைமை நிருவாகம் சமூக நலன் நோக்கிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை எமது அங்கத்தவர்களுக்கு நாம் தெரிவிக்கின்றோம். அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் ஒர் கூட்டு நிறுவனம். நோர்வே நாட்டு சட்டநெறி , நிறுவனப் பண்புகளைப் பின்பற்றி சனநாயக வழியில் கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. இந் நிறுவனத்தை நாம் தொடர்ந்து யாப்பு, நிறுவனப் பண்புகள் ஊடாக முன்கொண்டு செல்வதில் மிகவும் உறுதியாக உள்ளோம். இதுவே நிறுவனத்தின் நீடிய உறுதியான இருப்பிற்கு வழியாகும் என்பதில் எவ்வித ஐயப்பாடுகளுமில்லை என்பதனையும் நாம் சுட்டிக்காட்டவிரும்புகின்றோம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு எம்மால் அனுப்பப்பட்ட கடிதத்தினையும் இத்துடன் தங்கள் பார்வைக்காக இணைக்கின்றோம். “தமிழ் எங்கள் அடையாளம்” இவ்வண்ணம் தலைமை நிருவாகம் 2025 அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் | |
30.11.2024 | அன்னை பூபதி றொம்மன் வளாகத்தின் நிறுவனப் பதிவையும் நோர்வே நாட்டின் தகவற் காப்புக்குரிய அங்கத்தவர் விபரங்களையும் சில தனிநபர்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமைக்குரிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன. மேற்படி நபர்கள் தாம் செய்த சட்டத்திற்கு புறம்பான செயற்பாட்டை முழுமையாக ஏற்று, எமது நிறுவனத்தின் எதிர்காலச் செயற்பாட்டை பாதிக்காத வகையில் நடந்துகொள்வதற்கு உறுதி வழங்க வேண்டும். இது தொடர்பான பொறுப்புக்கூறலை எமது நிருவாகத்தோடு மேற்கொண்டு தகுந்த உத்தரவாதங்களை வழங்கினால், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடவடிக்கை எடுக்கப்படும். எமது நிருவாகத்தின் நெகிழ்வுப் போக்கான மேற்படி விடயத்தை ஏற்க முடியாதவிடத்து , அடுத்த கட்ட நடவடிக்கைகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இதர நிறுவனங்களும் இது குறித்து தகுந்த விழிப்புணர்வோடு இனியாவது செயற்படத் தவறக்கூடாது என்று சமூகப் பொறுப்போடு அறியத்தருகிறோம். | Text |
30.11.2023 | அங்கத்தவர்களுக்கான விளக்கக் கூட்டம் ஒன்றை அன்னை பூபதி தமிழ் கலைக்கூட தலைமை நிருவாகம் சனி 02.12.2023 மணி 09:45 ஏற்பாடு செய்துள்ளது. இந்த வேளையில், எமது வளாகத்தின் செயற்பாடுகளை குழப்பும் கபட நோக்கோடு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் பின்புலம் தெரியாமல் எவ்வித அடிப்படையுமற்ற போலிப் பரப்புரைகளுக்கு பலியாகாது அங்கத்தவர்களைப் பொறுப்போடும் நிதானத்துடனும் நடந்து கொள்ளுமாறு பணிவன்போடு வேண்டுகிறோம். | Text |
10.11.2023 | கட்டளையும் கையகப்படுத்தலும் உடைப்பு நடவடிக்கைகளும் அல்ல, புரிந்துணர்வுடன் இணைந்த செயற்பாடே தேசியத்துக்கு வலுச் சேர்க்கும்! | Video |
10.11.2023 | Rettslig oppførsel og Moralsk oppførsel NORSK | Video |
05.11.2023 | பாகம்4 அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் செயற்பாடுகளும் – திட்ட வரையறைகளும் -4 | Lyd |
03.11.2023 | 26.10.2023 தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வழங்கப்பட்ட உண்மைக்குப் புறம்பான தகவலை எமது வளாகம் முற்றிலும் நிராகரிக்கிறது.. அறிவித்தல் | Text |
03.11.2023 | அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் செயற்பாடுகள் யாப்பு மேம்படுத்தலூடாக – பாகம் 2 | Video |
01.11.20 | பாகம் -1,2,3 இணைத்த ஒலி வடிவம் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் செயற்பாடுகளும் – திட்ட வரையறைகளும் | Lyd |
30.10.2023 | பாகம்1 அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் செயற்பாடுகளும் – திட்ட வரையறைகளும் -1 | Lyd |
30.10.2023 | பாகம்- 2 அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் செயற்பாடுகளும் – திட்ட வரையறைகளும் -2 | Lyd |
30.10.2023 | பாகம் – 3 அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் செயற்பாடுகளும் – திட்ட வரையறைகளும் -3 | Lyd |
30.10.2023 | அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் நோர்வே பூராகவும் பரந்து விரிந்து பல கிளைகளைப் பரப்பி இன்று பெருவிருட்சமாக வியாபித்து நின்று தனது பணிகளை செயற்பாடுகளும் – திட்ட வரையறைகளும் | Text |
28.10.2023 | அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் செயற்பாடுகள் யாப்பு மேம்படுத்தலூடாக – பாகம்1 | Video |
26.10.2023 |
அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூட அங்கத்தவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூட அங்கத்தவர்களுக்கான முக்கிய அறிவித்தல் எமது கலைக் கூடத்தின் பெற்றார் சார்பாக கூட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படுவதாக பொதுவெளியில் போலியான கூட்டங்கள் சிலவற்றைச் சில … Continue reading
|
Text |
23.09.2023 | 23.09 நடந்த றொம்மன் பெற்றோர் தகவல் கூட்டத்திற்குப் பின்னர் சில பெற்றோர்கள் பொதுவெளித்தளங்களில் பொய்ப்பரப்பரையை எழுதி வருகின்றனர் பெற்றோர் குழு கடிதம் – றொம்மன் பெற்றோருக்கு | Text |
30.08.2023 | அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தொய்யன் வளாகம் – சுற்றறிக்கை | Text |
யாப்பு வளாகங்களின் யாப்பு வடிவம் | Text | |