லோறன்ன்ஸ்கூக் வளாகம்

26.10.2023 தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வழங்கப்பட்ட உண்மைக்குப் புறம்பான தகவலை எமது வளாகம் முற்றிலும் நிராகரிக்கிறது..

அறிவித்தல்
வளாகம் முகப்பு

அனைவருக்கும் வணக்கம்,

அண்மையில் (26.10.2023) தமிழ்முரசம் என்ற வானொலியில் வெளிவந்த செவ்வி ஒன்றில் எமது வளாக நிர்வாகம் சார்ந்த தவறாக முன்வைக்கப்பட்ட கருத்தினை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட கால உறுப்பினர் திருமிகு. முரளி சிவானந்தம் அவர்களால் வழங்கப்பட்ட தகவலில் எமது வளாகம் சார்ந்து சிலவிடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் குறிப்பிட்ட விடயம், எமது வளாகத்துடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் சந்திப்பினை நடாத்தியதாகவும் அதில் நாம் கூறியது எம்முடன் தாங்கள் சந்தித்துக் கதைத்த விடயத்தினை வெளியில் கூறவேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் தவறான விடயம்.

வளாக நிர்வாகப் பொறுப்பாளரை வளாகம் சார்ந்து அழைக்காமல், பொதுப்பணியில் இருக்கும் ஒரு தனிப்பட்ட நபராக அழைத்துக் கதைத்ததாக அவர் எமக்குத் தகவல் வழங்கி அங்கு சென்றுள்ளார். அவருடன் உரையாடியதனைப் பற்றி அவர் எழுதிய விளக்கமடலையும் இத்துடன் இணைக்கின்றோம். அவரின் கடிதத்தில் கூறப்பட்ட விடையங்களை சந்திப்பு முடிந்தவுடனே அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் தெரிவித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இணைப்பைப் பார்க்கவும்: நிர்வாகப் பொறுப்பாளரின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

Brev fra Styreleder APTKL vedrørende TCC og Tamilmurasam Radio - 26.10.2023

சில நாட்களின் பின் எமது வளாகத்தைப் பற்றிய சில தவறான செய்திகள் சிலரால் பரப்பப்பட்ட வேளை எமது நிர்வாக உறுப்பினரில் ஒருவருடன் திருமிகு. முரளி சிவானந்தம் அவர்கள் தொடர்புகொண்டு தெளிவு தேவையெனக் கேட்டபோது, நாம் நிர்வாகமாகச் சந்தித்து, அவருக்கு எம்மால் இரகசியங்களையும் பேணிக்காத்து வழங்கக் கூடிய அனைத்து விளக்கங்களையும் தெளிவுபடுத்தி, அவரும் அவ்விடயத்தில் தெளிவுகொண்டு விடைபெற்றார். இதில் எமது வளாகப் பொறுப்பாளரோ அல்லது நிர்வாக உறுப்பினர்களோ எந்தவொரு தயக்கமின்றிக் கலந்துரையாடினோம். நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாருக்கும் பயந்தும் இந்தச் சந்திப்பைப் பற்றி வெளியில் கதைக்கவேண்டாம் எனக் கூறவுல்லை என்பதனை அனைவருக்கும் இத்தாள் உறுதிப்படுத்துகின்றது.

இவ்வாறு இவர்கள் தவறான பரப்புரைகளைச் செய்வதாக நாம் எமது வளாக உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறான தவறான பரப்புரைகளைச் செய்து எமக்கும் எமது உறுப்பினர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும் விரிசலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயற்படுத்துவதகவே நாம் உணர்கின்றோம்.

ஒரு தாயமைப்பாகச் செயற்பட்டு தமிழ் மக்களை ஒருங்கிணைக்க வேண்டிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் செயற்பாடு எமது மக்களுக்குள் பிளவு ஏற்படும் வகையில் செயற்படுவதை எண்ணி நாம் வேதனையடைகின்றோம்.
எனவே தயவுசெய்து எமது வளாக உறுப்பினர்கள் மற்றும் வளாக நலன்விரும்பிகள் யாரும் இவ்வாறான பல தவறான பரப்புரைகளை நம்பிவிடாது நாம் தெளிவடைந்து செயற்படுவோம் என்று அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

இணைப்பைப் பார்க்கவும்: Brev til foreldre vedrørende TCC og Tamilmurasam Radio - 26.10.2023

 

எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக் வளாகம்.