மிருதங்கம்( தண்ணுமை)

மிருதங்கம்( தண்ணுமை) இது ஒரு தோல் வாத்தியம் ஆகும். பெரும்பாலும் பசுவின் தோலைப் பயன்படுத்தி பலா மரத்தினால் செய்யப்படுகிறது. சங்கீத கச்சேரிகளிலும், பரதநாட்டிய நிகழ்வுகளிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த தாள வாத்தியமாக மங்காப்புகழுடன் இன்றும் விளங்கி வருவது மிருதங்கம்.

மிருதங்கத்தில் மட்டுமே பல்வேறு சொற்களை வாசிக்க முடியும். ஒரு நாட்டியக் கலையில் எப்படி நவரசங்களும் அடங்கி இருக்கின்றதாே , அதே போன்று இந்த மிருதங்க இசைக் கருவியும் அனைத்து ரசங்களிற்கும் ஏற்றது. அதனாலேயே இதை” ராஜ வாத்தியம்” என்றும் சொல்லுவர். இது ஒரு மங்களகரமான வாத்தியமும் கூட.

தாளக்கட்டுடன் வாசிக்கப்படும் மிருதங்கமானது இருந்த நிலையிலேயே வாசிக்கப்படும். மிருதங்கத்தில்           ” தனி ஆவர்த்தனம்” வாசிப்பது என்பது கச்சேரிகளில் மிகச் சிறப்பம்சமாகத் திகழ்கின்றது. எமது மாணவர்கள் மிருதங்கத்தை விரும்பி் பயில்வது நமக்கு மகிழ்ச்சியானதே.