காலக் கோடு
முப்பதாம்ஆண்டில்
முத்தமிழின் முகவரியோடு,
முடிசூடி நிற்கும்
அன்னை பூபதி கலைக்கூடத்தின்
ஆணிவேர்.....
ஆசான்கள், நிருவாகிகள், பெற்றோர்கள்,மாணவர்கள், நிகழ்ச்சி வழிநடத்துனர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நிகழ்ச்சி தொடர்பாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரினதும் கூட்டிணைவாலும் தமிழ்மொழி மேல் கொண்ட தீராத காதலாலும் இன்று நிறைவடைந்த இணையவழி நிகழ்வுகள் யாவும் மிகவும் சிறப்பாக இடம் பெற்றதையிட்டு மகிழ்வும் நிறைவும் அடைகிறோம்.
கடந்த இரு வார இறுதி நாட்களிலும் அண்ணளவாக 500 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து சிறப்பித்த இணையவழி நிகழ்வுகள் எம்மை மேலும் இப்பணிகளைத் தொடரத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் எனும் மிகப்பெரிய அடையாளத்துடன் எம்மால் நிகழ்த்தப்படும் நிகழ்வுகளில் ஆர்வத்தோடு இணைந்து பணிபுரியும் உங்கள் அனைவருக்கும் எமது பணிக்குழுவினரின் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் தமிழ்ப் பணி எவ்வளவு பெறுமதி மிக்கது என்பதை இப்படியான நிகழ்வுகள் மூலம் அனைவருக்கும் அறியக் கிடைக்கின்றது. உங்கள் தமிழ்ப் பணி தொடரவும் சிறக்கவும் வாழ்த்துவதோடு, எதிர்காலத்திலும் அன்னைத் தமிழ் முற்ற நிகழ்வுகளில் உங்கள் பங்களிப்பை ஆர்வத்துடன் நல்குவீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.
ஒசுலோவும் அதனை அண்மித்த வளாகங்களினதும் மட்டுப்படுத்தப்பட்ட நிர்வாக உறுப்பினர்கள் நேரடியாகவும், வெளிமாவட்டங்களில் இயங்கும் வளாகங்கள் இணையமுற்றத்தினூடாகவும் கலந்துகொண்ட அன்னையின் ஆண்டுக் கூட்டம் இக் கூட்டத்தில் யாப்பில் சில மாற்றங்கள், எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டது. தொடர்ந்தும் பழைய நிதி நடைமுறை கடைப்பிடிப்பதாக வளாகங்கள் ஏகமனதாக வாக்கெடுப்பில் தெரிவித்தனர்.
ஒசுலோவும் அதனை அண்மித்த வளாகங்களினதும் மட்டுப்படுத்தப்பட்ட நிர்வாக உறுப்பினர்கள் நேரடியாகவும், வெளிமாவட்டங்களில் இயங்கும் வளாகங்கள் இணையமுற்றத்தினூடாகவும் கலந்துகொண்ட அன்னையின் ஆண்டுக் கூட்டம் இக் கூட்டத்தில் யாப்பில் சில மாற்றங்கள், எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டது. தொடர்ந்தும் பழைய நிதி நடைமுறை கடைப்பிடிப்பதாக வளாகங்கள் ஏகமனதாக வாக்கெடுப்பில் தெரிவித்தனர்.
கொரோனா - பொருளாதாரச் சுமையால் தமிழ் மொழிக் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டால், அதை ஈடு செய்யும் விதமாக பிள்ளைகளின் தமிழ் மொழிக் கல்விக்கான விசேட கட்டணக் குறைப்பு
கொரோனா வைரஸ் கிருமியின் தாக்கத்தால் எம்மில் சிலர் வேலையிழந்து பலத்த பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். இத் தாக்கத்தால் சாதாரண குடும்பத் தேவைகளோடு தமிழ் மொழிப் பாடசாலையில் தொடர்ந்து கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமத்தைக் கருத்திற் கொண்டு, அதன் சுமையை குறைக்கும் நோக்கோடு அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் தமிழ் மொழிக் கல்விக்கான விசேடக் கட்டணக் குறைப்பு விதிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
எந்தச் சூழலிலும் எம் சிறார்களின் தமிழ் மொழிக் கல்வி தடையின்றித் தொடர அன்னை பூபதி தமிழ்க் கல்விக்கூடம் திடசங்கற்பம் கொண்டுள்ளது என்பதை கோடிட்டுக் கூறவிரும்புகிறோம்.
இன்று ஒட்டுமொத்த உலகமும் முகம் கொடுத்துள்ள மிகவும் துர்ப்பாக்கியமான இவ்வேளையில், கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள பெற்றோர் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு உங்கள் தற்போதைய நிதிச் சிக்கல்களை ஆதாரங்களோடு எமது கல்விக்கூடத்திடம் சமர்ப்பிக்கையில் உங்கள் பிள்ளை, பிள்ளைகளின் தமிழ் மொழிக் கல்விக்கான விசேட கட்டணக் குறைப்பு எம்மால் மேற்கொள்ளப்படும். அதே வேளையில் உங்கள் தரவுகள் யாவும் சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்துவதோடு, உங்கள் தனிப்பட்ட விபரங்களின் இரகசியம் பேணப்படும் என்பதையும் உறுதிப்படுத்துகிறோம்.
பொருளாதாரச் சுமையால் தமிழ் மொழிக் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டால்,
அதை ஈடு செய்யும் விதமாக மாணவர்களின் தமிழ் மொழிக் கல்வி தடையின்றித் தொடர மேற்படி
முடிவை எமது கலைக்கூடம் எடுத்துள்ளது. என்பதை அறியத் தருகிறோம்.
அன்னையின் மாணவர்களுக்கான தனிப்பட்ட (இணையமுற்ற) TEAMS பயனாளர் கணக்கு அன்னையால் உருவாக்கப்பட்டது.
அன்னை வளாகங்களின் சக வகுப்பாசிரியர்களுக்கான இணைய முற்றச் சந்திப்பினை கல்வியியற்குழு 05.10.2020 - 19.11.2020 வரை நடாத்தியது.
திங்கள் மற்றும் வியாழக்கிழமை என்று 13 தடவைகள் சிறுவர் நிலை தொடக்கம் ஆண்டு 10 வரை நடைபெற்றது .
இதில் ஆசிரியர்கள் தமது கற்பித்தல் அணுகுமுறைகளைத் தமக்கு கொடுக்கப்பட்ட பாட அலகின் மூலம் 4 மொழித்திறன்களின் ஊடாக எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிப்பது என்பதனை திறம்பட எடுத்துரைத்திருப்பது இவ் கல்வியாண்டுக்கானச் சிறப்புப் பட்டறை வகுப்பாகக் கருதலாம் .
இணையமுற்றத்தில் ஆசிரியர்களுக்கானப் பட்டறை 27.09.2020 ஞாயிறு அன்று காலை 10.30-12.30
அன்னை தலைமை நிர்வாகத்தால் அனைத்து வளாகங்களிலும் கற்பிக்கும் ஆசிரியர்களை ஒன்றிணைத்து நடாத்தப்பட்டது. இக் கல்வியாண்டுக்கான இரண்டாவது ஆசிரியர் பட்டறையாக இது அமைந்தது. 115 மேற்பட்ட ஆசிரியர்கள் இப் பட்டறையில் பங்கேற்றனர்.
இருமொழிக் கலாச்சாரத்தில் தாய்மொழிக்கல்வியைக் கற்பதற்கும் அதனை நாளாந்த வாழ்வில் பயன்படுத்துவதற்கும் மாணவர்களை எவ்வாறு ஊக்குவித்தல் என்ற கருப்பொருளில் கருத்துரை வழங்கப்பட்டது.
Hvordan motivere barna til å lære og bruke morsmålet når de vokser opp i Norge
Elena.Tkachenko. professor fra Oslomet
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தமிழ் மொழி ஆசிரியர்களுக்கான இணைவழிப் பட்டறை 19.09.2020 அன்று சனியன்று இடம்பெற்றது. அன்னைத் தலைமை நிர்வாகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட இப் பட்டறையில் 118 ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்றதும் தமிழ் மொழிக் கற்கைச் செயற்பாட்டில் ஒரு வரலாற்றுச் சிறப்பம்சமாகும்.
சிங்கப்பூர் அரசாங்க தமிழ்க் கல்விச் செயற்பாட்டில் துணைப் பேராசிரியரும் தமிழ்ப் பாட நூல் ஆய்வாளரும், பாடநூல் தயாரிப்பாளருமான பேராசிரியர் சீதா லக்சுமி அவர்களால் இப் பட்டறை " கற்கைக்கானச் செயற்பாட்டு முறை " என்னும் தலைப்பில் அண்ணளவாக 2,5 மணி நேரம் இணைய வழியில் இடம்பெற்றது.
புலம் பெயர் வாழ்வில், வாழும் நாட்டின் நடைமுறையோடு, நவீன முறையில் தமிழ் மொழியை எவ்வாறு கற்பித்தல் முறை சிறந்தது என்பது பற்றிய தனது ஆழமான கருத்துக்களை பேராசிரியர் முன்வைத்தார். குறிப்பாக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நட்பு ரீதியான உறவு நிலையைப் பேணுவதோடு, மாணவரின் விருப்பங்களைக் கண்டறிந்து அறிந்து, உரையாடல் மூலம் சொல்லாட்சியை வளப்படுத்தும் கற்கை முறை சார்ந்து தனது கருத்துக்களைப் பதிவு செய்தார். மாணவர்களுடன் இலகுவான வார்த்தைகளில் உரையாடுவதும், அவ் உரையாடல்களில் மாணவர்களையும் ஈடுபடுத்துவதால் கற்பதில் ஆர்வம் ஏற்படும் என்பதோடு, அவர்களின் நாளாந்த பாடசாலைகளில் உள்ள நடைமுறையை தமிழ்ப் பள்ளிகளிலும் எதிர்பார்ப்பதால், அவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப மிகவும் எளிமையான, பொதுவான, பண்பான நடைமுறைகளை ஆசிரியர்கள் கடைப்பிடிப்பதே இன்றைய யதார்த்த வாழ்வியலுக்கு உகந்தது என்ற தனது கருத்தை வலியுறுத்தினார்.
பேராசிரியர் சீதா லக்சுமி தமிழ் மொழிக் கற்கை முறைக்கு மிகவும் பயன் தரும் பல சிந்தனைகளை விதைத்ததோடு, காலத்திற்கேற்ப கற்றலுக்கான செயற்பாடு முறையை மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் கோடிட்டுக் காட்டி பட்டறையை நிறைவு செய்தார்.
இன்று நடாத்தப்பட்ட பட்டறையில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட ஆசிரியர்கள் முழுப் பயனையும்பெற்றிருப்பர்கள் என்பதில் ஐயமில்லை.
1.தொய்யன் வளாகம் தமது கற்பித்தல் பணியினை ஒன்றுவிட்ட ஒரு சனிக்கிழமை தமிழர் வள ஆலோசனை மையத்திலும், அத்துடன் ஒன்றுவிட்ட ஒரு சனிக்கிழமை இணையமுற்றத்திலும் நடாத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.
நடைபெறும் நேரம், காலை 09:00 - 11:30 மணிவரை. (22.08.2020)
2.வைத்வெத் வளாகம் தமது கற்பித்தல் பணியினை ஒவ்வொரு சனிக்கிழமையும், தமிழர் வள ஆலோசனை மையத்தில் நடாத்தத் திட்டமிட்டுள்ளார்கள். நடைபெறும் நேரம், பகல் 12:00 - 15:00 மணிவரை. (22.08.2020)
3.லோறன்ஸ்கூக் வளாகம் தமது கற்பித்தல் பணியினை ஒன்றுவிட்ட ஒரு சனிக்கிழமை தமிழர் வள ஆலோசனை மையத்திலும் மற்றும் ஒன்றுவிட்ட ஒரு சனிக்கிழமை இணையமுற்றத்திலும் நடாத்தத் திட்டமிட்டுள்ளார்கள். நடைபெறும் நேரம், காலை 09:00 - 11:30 மணிவரை. (29.08.2020). லோறன்கூக் அங்கு பாடசாலை கிடைப்பதாக பின்பு அறிவித்ததனால் அவர்கள் அங்கே பாடசாலையை நடாத்தினார்கள்.
அத்துடன் லோறன்ஸ்கூக் வளாகம் சிலவகுப்புகளை ஞாயிற்றுக்கிழமைகளிலும், கலை வகுப்புக்களை வியாழக்கிழமைகளிலும், தமிழர் வள ஆலோசனை மையத்தில் நடாத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.(23.08.2020)
4.றொம்மன் வளாகம் அவர்களின் வாராந்த சனி 09:00, 12:00 மணிக்கு நடைபெறும் வகுப்புக்களில் மாற்றங்களைச் செய்கிறார்கள்.
பென்குயின் பயணம் சிறுவர்களுக்கான சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு
அன்று மதியம் 11 மணியளவில் பென்குயின் பயணம் சிறுவர்களுக்கான சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு தமிழர் வள ஆலோசனை மையத்தின் இரண்டாம் மாடியில் ஆரம்பமாகியது. வரவேற்புரை, மங்கள விளக்கேற்றல், அகவணக்கத்தினை தொடர்ந்து நூலுக்கான மதிப்பீட்டுரைகள் மதிப்பீடு செய்யப்பட்டதை அடுத்து நூல்வெளியீடு இடம்பெற்றது. நூலினை நூலின் படைப்பாளராகிய யோகராணி கணேசன் அவர்களின் தந்தையார் யோகராசா சிவகுரு வெளியீட்டு வைக்க முதல்; பிரதியை அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை நிர்வாகம் சார்பில் செ.நிர்மலன் பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து பாடசாலை நிர்வாகிகள் ஆசிரியர்கள் பார்வையாளர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டனர் தொடர்ந்து படைப்பாளிகளுக்கு அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தால் மதிப்பளிப்பு நடாத்தப்பட்டதை தொடர்ந்து படைப்பாளி யோகராணி கணேசன் அவர்களின் ஏற்பரையோடு நூல்வெளியீட்டு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
இதேவேளை அருகிவரும் சிறுவர் இலக்கியத்திற்கு உயிர் ஊட்டிய தாய்க்கும் குறிப்பாக நோர்வேயில் பிறந்து, அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் தமிழ் கற்று படைப்பாளிகளாக மிளிர்ந்துள்ள மகள்களுக்கும் தமிழ்முரசம் வானொலி மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
மழலையர்ப் பாடல்கள் எழுதி ஆசிரியர்களுக்கான அழைப்பு (30.07.2020)
4-10 ஆண்டு கற்கும் மாணவர்களுக்கான ,இவ் இணையவழி நிகழ்வில் 180 பேர் பங்குபற்றிச் சிறப்பித்திருந்தார்கள்.
https://www.youtube.com/playlist?list=PL4pCMXCHHRDVmHCjyfrK2yGm34udV8__i
மே 18 இன அழிப்பின் குறியீட்டு நாளை நினைவு கூறும் வகையில் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அன்னை இசைக்குழுவினரால் இப் பாடல் வெளி வருகிறது.
https://youtu.be/F9moBx5D0Zg
ஞாயிறு நடைபெற்று முடிந்த மழலையர் முற்றத்தில் 190 மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினார்கள். கொரோன தனிமைப்படுத்தலின் போது சிறுவர்களின் மனநிலையை சோர்வடையாது மற்றவர்களை காணொளியில் பார்த்து மகிழந்த இவ் நிகழ்வுகள் உதவின. உலகில் இணையவழியில் இணையமுற்றத்தில் நடைபெற்ற முதல் நிகழ்வுகளில் எம் மழலையர் முற்றமும் ஒன்று என்பதில் பெருமை அடைவதோடு. இவ் நிகழ்வு முன்னோடியாக அமையப்பெற்றதில் எமது கலைக் கூடம் பெருமை அடைகிறது.
காணொளி பாகம் 3 , பாகம் 4, பாகம் 5 என லுழரவுரடிந இல்
https://www.youtube.com/watch?v=0ypQIkGxS0o
இணைய முற்றத்தில் 14 வளாகங்கள் பொதுச் செயற்திட்டத்தில் இணைந்துள்ளன. இதில் 1200 சிறுவர்கள் இணைக்கப்பட்டதுடன் 350 மேற்பட்ட ஆசிரியர்கள், நிர்வாகிகள் இணைக்கப்பட்டனர். அன்னை பூபதி வளாகங்களில் வுநுயுஆளு பாவனையே எதிர்கால இணையவழிக்கல்வியாக அமையும். அன்னை வளாகங்கள் அனைத்தும் ஒர் அணியில் ஒன்றாகப் பயணித்து அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்வோம் என உறுதி கொள்வோம்.
தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் அன்னை பூபதியின் நினைவு நாள். இன்று நாம் இணைய முற்றத்தில் (இணையவழிக் கல்வியில்) கால் எடுத்துவைத்துள்ளோம். எமக்கான எதிர்கால கல்வி வழிமுறைகளில் இணைய முற்றம்(இணையகல்வி) இணைந்து பயணிக்கும்
நாட்டுப்பற்றாளர் தினத்தில் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதுடன், இடர்களும் இன்னல்களும் எம்மீது திணிக்கப்படும் காலத்தில் நாம் ஒரு தேசிய இனமாக, இந்நிலைகளில் இருந்து மீண்டெழப் பணியாற்ற வேண்டும் என்பதில் எம்முடன் இணைந்து அர்ப்பணிப்புடன் தமிழ்ப் பணி செய்திடும் நிர்வாகிகளே, ஆசிரியர்களே!
உங்கள் இணைந்த பணியினால் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் எம் எதிர்காலச் சந்ததியினருக்குத் தமிழ்க்கல்வியுடன் கலை பண்பாட்டையும் வழங்கிடும் பணியை இவ் இடரான நேரத்திலும் ஒருங்கமைத்துச் செயற்பட, வழிசமைத்த தங்களின் அர்பணிப்பும் கரிசனையும் கலந்த செயற்பாடுகள் வார்த்தைகளால் சொல்ல இயலாதவை. இணையவழிக் கல்வி என்பது தங்களைப் போல் எமக்கும் புதிதானதே! புதிதாயினும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்னும் மனவுறுதியுடன், மிகவும் குறுகிய காலத்தில் காலத்தின் தேவை கருதி இதைப் பயின்று, இதன் பாவனைகளை அறிந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து இன்று இணையவழிக் கல்வியைச் சாத்தியமாக்கியுள்ளீர்கள்.
நாம் இன்று Teams எனும் பொருளைப் பாவித்துப் பயன் பெறுவதற்கு எமக்கான வழி முறைகளை ஆராய்ந்து திட்டமிட்டபடி நேர்த்தியாக எம்மை இவ் Teams பாவனைக்கு கொண்டு செல்வதற்கு களப்பணியாற்றியவர் திரு கோகுலன் ரட்ணசிங்கம் அவர்கள். இவர் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் மாணவனாகப் பயணித்து இன்று பெற்றோர் ஆகவும், அத்தோடு மென்பொருள்களைத் தயாரிக்கும், மென்பொருட்களுக்கு அனுசரனை வழங்கும் ஒரு தொழில் நிறுவனத்தை நிர்வகிக்கும் தொழில் அதிபராகப் பர்ணமித்திருப்பது(பணியாற்றுவது) எமக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும், அவரோடு அஸ்கர் பாரும் (Asker og Bærum)வளாகத்தில் இருந்து திரு கண்ணண் நாகேந்திரம் மற்றும் திரு ரிஷி குலேந்திரன் ஆகியோரின் பங்களிப்பும் அளப்பெரியது. இப்பெருமுயற்சிக்கான முன்னேற்பாடுகள் யாவும் அஸ்கர் பாரும்(Asker og Bærum), வளாகத்தில் நடந்தேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று நாம் இணைய முற்றத்தில் (இணையவழிக் கல்வியில்) கால் எடுத்துவைத்துள்ளோம். எமக்கான எதிர்கால கல்வி வழிமுறைகளில் இணைய முற்றம்(இணையகல்வி) இணைந்து பயணிக்கும் என்பதை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம். ஆதலால் பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்தி தமது பிள்ளைகளின் கல்வி தடையின்றிச் செயற்பட வழிசமைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். வுநுயுஆளு இல் இணைந்து கொள்வதில் தங்களுக்குத் தடைகள், ஐயப்பாடுகள் இருப்பின் வளாகத்துடன் தொடர்பு கொண்டு இணையுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
நோர்வே அரசும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து வகுத்துள்ள திட்டங்களின்படி கொரோனா கிருமியின் பரவலால் முடக்கப்பட்டிருந்த நோர்வேப் பாடசாலைகள் எதிர்வரும் 27.04.2020 தொடக்கம் மட்டுப்படுத்தப்பட்ட விசேட நிபந்தனைகளின் அடிப்படையில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் எமது கலைக்கூடங்களின் நேரடிக் கற்பித்தலை 15.08.2020 இற்கு முன்னர் மீண்டும் ஆரம்பிப்பதென்பது சாத்தியமற்றதாகவே இருக்கும் எனக் கருதுகின்றோம்.
இணைய முற்றத்தில் 14 வளாகங்கள் பொதுச் செயற்திட்டத்தில் இணைந்துள்ளன. அன்னை பூபதி வளாகங்களில் வுநுயுஆளு பாவனையே எதிர்கால இணையவழிக்கல்வியாக அமையும். அன்னை வளாகங்கள் அனைத்தும் ஒர் அணியில் ஒன்றாகப் பயணித்து அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்வோம் என உறுதி கொள்வோம்.
நோய்க்கிருமி தொற்றும் அபாயத்தை தடுப்பதற்கு. தேவையற்ற ஒன்று கூடல்கள், விருந்துபசாரங்களை தவிர்த்து பிள்ளைகளின் உடல் நலத்தில் கருத்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றீர்கள்.
கொரோன சார்ந்த கேள்விகள், சந்தேகங்கள், ஆலோசனைகளை மருத்துவ துறைசார் பணியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நோர்வே தமிழர் சுகாதாரா அமைப்புடன் தொடர்பு கொள்ள 46678075 (NTHO)