அறிவிப்புகள்
நிகழ்வுகள்
சிறுவர் கதை சொல்லுதல் , சிறுவர் பேச்சு.
21.03.2026 தேசிய மட்டத்திலான சிறுவர் கதைசொல்லும் போட்டிகள் மற்றும் பேச்சுப் போட்டிகள் தொடர்பான அறிவிப்பு!
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள சிறுவர் கதைசொல்லும் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி ஆகியவற்றின் தேசிய மட்டத்திலான இறுதிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக, ஒவ்வொரு வளாகத்திலும் தெரிவுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இத்தெரிவுப் போட்டிகளில் முதல் மூன்று நிலைகளைப் பெறும் மாணவர்களே தேசிய மட்டத்திலான இறுதிப் போட்டியில் பங்குபெறும் தகுதியைப் பெறுவார்கள். போட்டிகள் அனைத்தும் மாணவர்களின் பிறந்த ஆண்டின் அடிப்படையிலேயே நடத்தப்படும் என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும். மேலும்,
தெரிவுப் போட்டிகளை உரிய காலத்தில் நடாத்தும் வகையில் வளாகத்தின் நிர்வாகத்தினர் திட்டமிடுவர்.
இப்போட்டிகளில் சிறார்களை உற்சாகப்படுத்தி, அவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் வகையில், வளாகங்களும் பெற்றோர்களும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பீர்கள் என நம்புகிறோம்.
நடுவர்களால் கவனிக்கப்படும் அம்சங்கள்
சிறுவர் கதைசொல்லும் போட்டிகளிலும் பேச்சுப் போட்டிகளிலும், போட்டியாளர்களின் நிலை, உச்சரிப்பு, தொனி, பாவம், மனனம் ஆகியவை மிக நுணுக்கமாகக் கவனிக்கப்பட்டு அதற்கேற்ப புள்ளிகள் வழங்கப்படும்.
போட்டிகளின் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் முழு அதிகாரமும் நடுவர்களுக்கே உரியது என்பதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வருகின்றோம்.
சிறுவர் கதைசொல்லும் போட்டி
சிறுவர் கதைசொல்லும் போட்டியில்,
மாணவர்கள் தமக்கு விருப்பமான கதைகளை சொல்லலாம்.
அவர்கள் சொல்லவுள்ள கதைகளை எழுதி அச்சிட்டு, போட்டியாளர்களின் பெயர்களுடன்,போட்டியாளர்களின் விபரங்கள் அனுப்பப்படும் காலக்கெடுவிற்குள் எமது குழுவிற்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இது, நடுவர்கள் மனனத்தை மதிப்பீடு செய்வதற்கும், கதைசொல்லும் போது இடையில் தொடர முடியாமல் நிற்கும் சிறார்களுக்கு கதையின் தொடர்ச்சியை வழங்குவதற்கும் மிகவும் அவசியமானதாக இருக்கும்.
சிறுவர் கதைசொல்லும் போட்டிக்கான புள்ளி வழங்கும் முறை, பேச்சுப் போட்டிக்கான முறையைப் போன்றதே ஆகும்.
பேச்சுகள்,
ஒலி வடிவப் பேச்சுகள்,
ஆண்டு 3: https://youtube.com/shorts/nYxhvWMvQFE?feature=share
அன்னைத் தமிழ்முற்றம்
அன்னைத் தமிழ்முற்றம் மாணவர்களின் மொழித்திறனையும் தனித்திறனையும் தேசியமட்டதில் வெளிக்கொணர அன்னைத் தலைமை நிருவாகத்தால் உருவாக்கப்பட்ட சிந்தனைக் குழாம் ஆகும். இவர்கள் மாணவர்களின் நலனையும் தேவையையும் இனம்கண்டு அவர்களைத் தமிழ்ப்பண்பாட்டு விழுமியங்களின் ஆளுகைக்குள் நகர்த்தும் தூர நோக்கு கொண்டது. தேசிய மட்டத்தில் போட்டிகள், நிகழ்வுகள் நடாத்துவதன் மூலம் மாணவர்களை ஊக்குவிக்கும் தளமாக இயங்கும். வளாகங்களின் விருபங்களைக் கேட்டறிந்து வளர்ந்துவரும் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினருக்கும் தமிழ்மொழி மேல் ஈடுபாட்டை அதிகரிக்க தேவையான உத்திகளை வகுத்து அனைவரையும் இணைக்கும் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும். எமது தாய்மொழியாம் தமிழ்மொழியைப் புலம்பெயர் சூழலில் எவ்வாறு தொடர்ந்தும் தக்க வைக்க முடியும் என்பது சார்ந்த செயற்பாட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்தையும் கொண்டது. தமிழ் எமது அடையாளம் என்பதற்கு வலுச்சேரப்;பதாகவே அன்னைத் தமிழ்முற்றத்தின் பணிக் குழுவினரின் செயற்பாடுகள் அமைந்திருக்கும்.
சிறுவர் கதை சொல்லுதல்
போட்டிகள் ஆன் பெண் என தனி தனி பிரிவுகளாக நடத்தப்படும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்குபெறலாம் . கதை சொல்லும் போட்டியானது குழந்தைகளுக்கு பெரியவர்கள் கதை சொல்லுதல் .
சிறுவர் பேச்சு
போட்டிகள் ஆன் பெண் என தனி தனி பிரிவுகளாக நடத்தப்படும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்குபெறலாம் . கதை சொல்லும் போட்டியானது குழந்தைகளுக்கு பெரியவர்கள் கதை சொல்லுதல் .
திருக்குறள் ஒப்பித்தல்
போட்டிகள் ஆன் பெண் என தனி தனி பிரிவுகளாக நடத்தப்படும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்குபெறலாம் . கதை சொல்லும் போட்டியானது குழந்தைகளுக்கு பெரியவர்கள் கதை சொல்லுதல் .
போட்டிகள் ஆன் பெண் என தனி தனி பிரிவுகளாக நடத்தப்படும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்குபெறலாம் . கதை சொல்லும் போட்டியானது குழந்தைகளுக்கு பெரியவர்கள் கதை சொல்லுதல் .
கவிதை மொழிதல், கவிதை படைத்தலும் மொழிதலும் , திருக்குறள் மன்னன்ம் செய்தல் , ஒப்பித்தல் , சிறுவர் பேச்சு , கதை சொல்லுதல்
வளாகங்களில் நடாத்தப்படும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்கள், எம்மால் தேசிய ரீதியாக நடாத்தப்படும் போட்டியில் பங்குகொள்ள தகுதி பெறுவர்.
