2019ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டுவரை பிறந்த மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகளும் ஆண், பெண் என இரு பிரிவுகளாக இடம்பெறும் என்பதையும் அறியத் தருகின்றோம்.
கீழே காணும் இணைப்பை அழுத்தி பிறந்த ஆண்டின் அடிப்படையில் பேச்சை தரவிறக்கம் செய்யவும்
2019 பேச்சு
2018 பேச்சு
2017 பேச்சு
2016 பேச்சு
2015 பேச்சு
2014 பேச்சு
2013 பேச்சு
2020ஆம் ஆண்டு பிறந்த சிறுவர் கதைசொல்லும் போட்டியில் கலந்து கொள்வர், இது ஆண், பெண் என இரு பிரிவுகளாக இடம் பெறும்.
போட்டி விதிமுறைகள்
2020 இல் பிறந்த சிறுவர் கதை சொல்லும் போட்டிக்கான விதிமுறைகள்.
பங்கேற்பாளர்கள் தாங்கள் தெரிவு செய்த கதையை முறையாக மனனம் செய்து தயார் செய்து சொல்ல வேண்டும்.
கதை சொல்லும் நேரம் 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
வளாகத்தில் தெரிவு செய்யப்பட்ட முதல் மூன்று நிலைகளையும் பெற்றவர்கள் தேசியமட்டத்திலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.
வளாகத்தில் சொல்லப்பட்ட கதையை தேசியமட்டத்தில் சொல்லலாம். விருப்பமுள்ளவர்கள் புதிய கதையையும் தெரிவு செய்து சொல்லலாம்.
தேர்வு செய்யப்பட்டவர்கள், தாங்கள் சொல்லும் கதையின் நகலை 08.03.2026 க்குள் வளாகத்தின் ஊடாக அன்னை முற்றப் பணிக் குழுவினருக்கு அனுப்பதல் வேண்டும்.
கதைசொல்லுதலில் கவனிக்கப்படும் விடயங்கள்
நிலை, உரப்பு, மனனம், பாவம், தொனி. மேற்கூறியவை நடுவர்களால் கவனிக்கப்படும் விடயங்களாகும்
வளாகங்களில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்கள் தேசிய மட்டத்தில் இடம்பெறும் போட்டிகளில் பங்கு கொள்ளும் தகைமையை பெறுவர்.
தேசிய மட்டத்தில் சிறுவர்கள் கதைசொல்லும் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் என்பன எதிர்வரும் 21.03.2026 சனியன்று மதியம் 13.00 மணிக்கு தமிழர் வள ஆலோசனை மையத்தின் கட்டிடத் தொகுதியில் இடம்பெறும். மேலும், வளாகங்கள் தகுதிகாண் போட்டிகளை நடாத்தி முடிவுகளை, எதிர்வரும் 08.03.2026 ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
