அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூட அங்கத்தவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூட அங்கத்தவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
எமது கலைக் கூடத்தின் பெற்றார் சார்பாக கூட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படுவதாக பொதுவெளியில் போலியான கூட்டங்கள் சிலவற்றைச் சில குழப்பவாதிகள் எமது கலைக்கூடத்தின் எதுவித அங்கீகாரமும் இன்றி ஒழுங்குசெய்து வருவதாக அறிகிறோம்.
இவ்வாறான கூட்டங்களுக்கும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்திற்கும் எதுவித தொடர்போ, அங்கீகாரமோ, பொறுப்போ இல்லை என்பதை அங்கத்தவர்கள் அனைவருக்கும் இத்தால் அறியத் தருகிறோம்.
இவ்வாறான கூட்டங்கள் இம்மியளவேனும் எதுவித தாக்கத்தையும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்திற்கு ஏற்படுத்தப் போவதில்லை.
யாப்புவிதிகளுக்கு இணங்க நேர்த்தியாக எமது கலைக் கூடம் இயங்கிவருகிறது.
இது தொடர்பில் அங்கத்தவர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் வெளிப்படைத்தன்மையோடு அவற்றை அறிந்துகொள்ள எமது வளாகங்களையும் தலைமை நிருவாகத்தையும் நேரடியாக அணுகி அங்கத்தவர்கள் அறிந்துகொள்ளலாம்.
அங்கத்தவர்களுக்கான விளக்கக் கூட்டம் ஒன்றை அன்னை பூபதி றொம்மன் வளாகத்தில் விரைவில் ஏற்பாடு செய்யவுள்ளோம். அது குறித்த அறிவித்தல் அங்கத்தவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
இச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் பின்புலம் தெரியாமல் எவ்வித அடிப்படையுமற்ற போலிப் பரப்புரைகளுக்கு பலியாகாது அங்கத்தவர்களைப் பொறுப்போடு செயற்படுமாறு பொறுப்புணர்வோடும் பணிவன்போடும் வேண்டுகிறோம்.
இவ்வண்ணம்,
தலைமை நிருவாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் – நோர்வே