நோர்வே நாட்டிலே தமிழர்களுக்காக அரசியல், சமூகப் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் வருடாவருடம் நடாத்தப்படும் சுதந்திரதாகம் நிகழ்வின் கலைஞர்கள், பெற்றோர் சந்திப்பு Elingsrudåsen Kirke வில் , நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்மொழிக் கல்வியின் தேவையினையும், அதற்கான ஒரு கல்விக்கூடத்தின் அவசியத்தினையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் ஒரு கோரிக்கையாக முன்வைத்தனர். அதன்பலனாக 01.02.92 ஆம் ஆண்டு அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் என்னும் பெயர் தாங்கி 22 மாணவர்களுடன் Linderud Vidregående Skole வில் அருட்திரு அருளானந்தம் அவர்களால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்பகாலத்திலே தமிழ்மொழியோடு, சைவசமயம், கிறிஸ்தவசமயம், சங்கீதம், நடனம், மிருதங்கம் ஆகிய பாடங்கள் போதிக்கப்பட்டன. 22 மாணவர்கள் 90 மாணவர்களாக வளற்ச்சி கண்டபோது 25-06.92 இரு இல்லங்களுக்கிடையே இல்லவிளையாட்டுப் போட்டி சிறப்பாக நடாத்தப்பட்டது. இக்காலப்பகுதியில் உறுப்பெழுத்து, ஓவியம், பேச்சுப் போட்டிகளை நடாத்தி முதலாவது ஆண்டு விழாவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.
1993 ஆம் ஆண்டில் மாணவர்கள் தொகை அதிகரித்தமையினால் இரண்டு இல்லங்கள் மூன்று இல்லங்களாக தோற்றங்கொண்டது.
1994 ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலே கலைப்பாட மாணவர்களின் கலை ஆர்வம் அதீதமாகக் காணப்பட்டது. இதன்பயனாக 10.07.94ல் Førde எனும் இடத்தில் 250 க்கு மேற்பட்ட கலஞர்கள் பங்குகொண்டிருந்த சர்வதேச கலைமாலையில் தமிழ் இனத்தின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் நடன வடிவங்களை எம்மாணவர்கள் வழங்கி பலரதும் பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், சிறிலங்காவின் தேசியக் கொடியின் கீழ் எமது பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெறுவது பொருத்தமற்றது என நிகழ்வின் ஒருங்கமைப்பாளர்களுக்கு ஆணித்தரமாக எடுத்துக்கூறி அக்கொடி கீழே இறக்கி வைக்கபபட்ட பின்னரே கலை நிகழ்வினை மாணவர்கள் வழங்கியிருந்தார்கள்; என்பது குறிப்பிடத்தக்கது.
15.10.94 இல் ”மழலைப்பூக்கள்” ”மழலைப்பூங்கா”எனும் இரு சிறுவர் பாடல் ஒலி இழைகள் வெளியிடப்பட்டன. இவ்வாண்டிலேயே தமிழ்க் கலைக்கூடத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் சிற்றுண்டிச்சாலைகளுடாக திரட்டப்படும் நிதி,ஆசிரியர்களின் அன்பளிப்பு ஆகியன தமிழீழத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளைக் காத்துவரும் செஞ்சோலைக் காப்பகத்திற்கு அனுப்பி வைக்க தொடக்கி விடப்பட்டது.
15.01.95 இல் ஞாயிறு உதவிப்பாடத்திட்ட வகுப்புக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அதில் பிற மொழி பேசும் மாணவர்களும் இணைந்துகொண்டனர்.
10.04.96 இல் தமிழ்க் கலைக்கூட கட்டமைப்பு விரிவாக்கப்பட்டு, தமிழர் வள-ஆலோசனை மையம் பதிவுசெய்யப்பட்டது. இக்காலப்பகுதியில் ” தமிழ் அமுது” எனும் பாடநூல் வெளியிடப்பட்டது.
1998 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு நிறைவு செய்து செல்லும் மாணவர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
1999 ஆம் ஆண்டில் ”Rommen” என்ற இடத்தில் பெற்றோர்,மற்றும் தமிழ் சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் நிதி அன்பளிப்பும் ,தமிழ்க் கலைக்கூடத்தின் பலவருட சேமிப்பின் மூலமும் சொந்தமாக ஒரு கட்டடத் தொகுதி இம் மையத்திற்காக வாங்கப்பட்டது.
22.01.2000 இல் முதல் தடவையாக தமிழ்க் கலைக்கூடத்தின் கலைப்பிரிவு சகோதர மாணவர்களின் மிருதங்க,நடன முதலரங்க நிகழ்வு நடைபெற்றது.தொடர்ந்து
09.09.2000 இல் இரு சகோதரிகளின் நடன அரங்கேற்ற நிகழ்வும் நடைபெற்றது.சமூக ஆர்வலர்களுக்கான அன்னை பூபதி விருதும் இவ்வாண்டிலே ஆரம்பித்து வைக்கப்பட்டது.
09.11.2000 இல் நகர பிதா Per Ditlev Simonsen இம்மையத்தைத் திறந்து வைத்தார். அப்போது பட்டாம் பூச்சி பாப்பா எனும் சிறுவர் பாடல் ஒலி வட்டும் வெளியிடப்பட்டது. 2001 ம் ஆண்டு ஒன்பதாவது ஆண்டுவிழா ஒஸ்லோவில் முதல் முதலாக இரு நாள் பெருவிழாவாக நடைபெற்றது. இவ்வாண்டிலேயே தமிழ் இளைஞர் மன்றம் உருவாக்கப்பட்டு, ”பாலம்” எனும் சிறு சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான ”மூத்தோர்முற்றம்” இவ்வாண்டிலே தான் தோற்றம் பெற்றது.
01.09.2001 இல் தமிழ்க் கலைக்கூடத்தின் புதிய கிளை வளாகமாக தொய்யன் வளாகம் உருவானது.
01.02.2002 இல் லோறன்ன்ஸ்கூக் வளாகம் உருவானது.
10.02.2002 இல் துறண்கைம் நகரில் ஞாயிறு உதவிப்பாடத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
16.02.2002 இல் திறமன் வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறைகளும் நடாத்தப்பட்டது.
12.02. 2005 இல் அஸ்கர் பாறும் அன்னை பூபதி கலைக் கூடத்தின் முதற் சந்திப்பு நிகழ்வு ஹொவிக் (Høvik) பாடசாலையில், ஆரம்பிக்கப்பட்டது
07.02.2012 இல் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட மொட்டன்ஸ்றூட் வளாகம் ஸ்ரேன் புறோத்தன் நோர்வேயிய பாடசாலையில் உதயமாகின்றது. அன்னை தலைமை நிர்வாகத்தின் தொலைநோக்கு சிந்தனையின் ஓர் பரிணாம வளர்ச்சியாக இவ் உதயம் பரிணமிக்கின்றது.
இவ் வளாகம் Søndre Nordstrand Bydel சார்பில் கலந்துகொண்ட Shabaz Tarig Leder BU அவர்களால் தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் திரு உருவப் படத்திற்கு ஈகைச்சுடரேற்றிஆரம்பித்து வைக்கப்பட்டது.தொடர்ந்து மங்கள விளக்கும் ஏற்றப்பட்டது. அன்னை தலைமை நிர்வாகத்தின் சார்பில் நோர்வேசிய மொழியில் எமது செயல்பாடுகளும், செயல்நோக்கம் சார்ந்தும் கருத்துக்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து உரையாற்றிய பிரதமவிருந்தினர் அவர்கள் இவ்வளாகத்தினை திறந்து வைத்து சில கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்வதில் தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.
இவ்வாறு வளற்ச்சிகண்ட அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் தற்போது பதினைந்தாவது வளாக விரிவாக்கம் பெற்று சிறப்புடன் இயங்கி வருகின்றது. இப் பதினைந்து வளாகங்களையும் அன்னை தலைமை நிருவாகம் ஒருங்கிணைத்து நிருவகித்து