தேசியமட்ட திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, அறிவாடல் போட்டி – 2026
வளாகங்களின் கவனத்திற்கு!
அன்புடையீர்,
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் 35ஆவது கல்வியாண்டை முன்னிட்டு, மாணவர்களின் அறிவாற்றல், மொழித்திறன், நினைவாற்றல், படைப்பாற்றல் மற்றும் தமிழ்மொழி மீதான ஆர்வத்தை மேலும் வளர்க்கும் நோக்கில், தேசியமட்ட திருக்குறள் ஒப்பித்தல் போட்டி – 2026 மற்றும் தேசியமட்ட அறிவாடல் போட்டி – 2026 ஆகியன இவ்வாண்டும் சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளன.
இப்போட்டிகள், ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால அட்டவணைக்கு அமைவாக நடைபெறுவதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருக்குறள் ஒப்பித்தல் போட்டி – 2026
மாணவர்களின் வயது, கற்றல் நிலை மற்றும் புரிதல் திறன் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு ஏற்றவாறும் காலத்திற்குப் பொருத்தமானவாறும் திருக்குறள்கள் தெரிவுசெய்யப்பட்டு வருகின்றன.
அத்துடன், போட்டியின் தரத்தையும் மாணவர்களின் பங்கேற்பு வாய்ப்பையும் மேலும் மேம்படுத்தும் வகையில், போட்டி விதிமுறைகளிலும் தேவையான சில மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருக்குறள் தொடர்பான தகைமையும் அனுபவமும் கொண்ட கல்வியாளர்களின் வழிகாட்டலுடன், இப்பணிகள் மிகவும் கவனமாகவும் பொறுப்புணர்வுடனும் முன்னெடுக்கப்படுகின்றன.
தெரிவுசெய்யப்படும் திருக்குறள்கள் மற்றும் போட்டி தொடர்பான மேலதிக விபரங்கள் மிக விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
அறிவாடல் போட்டி – 2026
மாணவர்களின் பொது அறிவு, சிந்தனைத்திறன், தமிழறிவு மற்றும் அறிவுத்திறனை வெளிக்கொணரும் வகையில் அறிவாடல் 2026 போட்டியும் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கான வினாக் கொத்து விரைவில் தயாரிக்கப்பட்டு மாணவர்களைச் சென்றடையும். போட்டிக்கான விதிமுறைகள், பங்கேற்பு தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் ஏனைய தேவையான தகவல்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
35ஆவது கல்வியாண்டு – சிறப்பு முன்னெடுப்புகள்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் 35ஆவது கல்வியாண்டை சிறப்பிக்கும் வகையில், மாணவர்களின் கல்வி, அறிவு, ஆற்றல், திறமை மற்றும் தமிழ்மொழி மீதான ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் மற்றும் கல்விசார் செயற்பாடுகள் இவ்வாண்டு திட்டமிடப்பட்டு வருகின்றன.
எனவே, மாணவர்கள் அனைவரும் இப்போட்டிகளில் ஆர்வத்துடனும் முழுமையான ஈடுபாட்டுடனும் பங்கேற்பதற்கான ஊக்கத்தையும் வழிகாட்டலையும் வழங்குமாறு அனைத்து வளாக நிர்வாகங்களையும் ஆசிரியர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும், இந்நிகழ்வுகளைச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுப்பதற்கு வளாக நிர்வாகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.
நன்றி.
“தமிழ் எங்கள் அடையாளம்”
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்
