அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட உறுப்பினர்களுக்கான தகவல்.
தமிழீழத் தேசியத் தலைவரின் வழிநடத்தலில் உருவான பல கட்டமைப்புகள் இன்று திசைமாறி செல்வதையும், தேசிய இனமாக இணைந்து பயணிக்க வேண்டியவர்கள் சிதைந்து சமூகச் சீரழிவை நோக்கி செல்வதும் ஆபத்தானது என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுவதோடு, இந்நடவடிக்கையை நாம் தொடர்ந்தும் கைகட்டி பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனவே சமூக அக்கறையுடனும், தார்மீகப் பொறுப்புடனும் நடந்து கொள்வதுடன், நோர்வே வாழ் தமிழர்களின் எதிர்காலம் சார்ந்து சிந்தித்துப் பயணிக்க வேண்டிய அகத்தியமான காலத்தில் நிற்கிறோம்.
இவற்றைக் கருத்திற்கொண்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு அன்னை தலைமை நிருவாகம் சமூக நலன் நோக்கிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை எமது அங்கத்தவர்களுக்கு நாம் தெரிவிக்கின்றோம்.
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் ஒர் கூட்டு நிறுவனம். நோர்வே நாட்டு சட்டநெறி , நிறுவனப் பண்புகளைப் பின்பற்றி சனநாயக வழியில் கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. இந் நிறுவனத்தை நாம் தொடர்ந்து யாப்பு, நிறுவனப் பண்புகள் ஊடாக முன்கொண்டு செல்வதில் மிகவும் உறுதியாக உள்ளோம். இதுவே நிறுவனத்தின் நீடிய உறுதியான இருப்பிற்கு வழியாகும் என்பதில் எவ்வித ஐயப்பாடுகளுமில்லை என்பதனையும் நாம் சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு எம்மால் அனுப்பப்பட்ட கடிதத்தினையும் இத்துடன் தங்கள் பார்வைக்காக இணைக்கின்றோம்.
“தமிழ் எங்கள் அடையாளம்”
இவ்வண்ணம்
தலைமை நிருவாகம் 2025
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்
