தேசிய ஆண்டுக்கூட்டம் 2024 பற்றிய தகவல்
அங்கத்தினர் அனைவருக்கும் தேசிய ஆண்டுக் கூட்டம் தொடர்பான பொது அறிவித்தலாக கீழ்க்காணும் தகவல் அமைகிறது.
கடந்த வருடம் 23.04.2023 இடம்பெற்ற தேசிய ஆண்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு அமைய, அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தேசிய ஆண்டுக் கூட்டமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ம் 27ம் திகதிகளில் இடம்பெறும் என்பதை அறியத் தருகிறோம்.
தேசிய ஆண்டு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள், பரிந்துரைகள் அனுப்பவேண்டிய இறுதித் நாள்: 28.09.2024
தேசிய ஆண்டுக் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள், முதலில் வளாகங்களின் ஆண்டுக்கூட்டம், நிருவாகம் ஆகிய மட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு , அவை அங்கு ஆராயப்பட்டு, சனநாயக பண்புகளுக்கு அமைய முடிவுகளை எடுத்து, தேசிய ஆண்டுக் கூட்டத்தில் விவாதத்திற்கு உரியதாக இருக்கும் விடயங்களை அன்னைத் தலைமை நிருவாகத்திற்கு அனுப்பி வைத்தல் நிறுவனப் பண்பாகும். மேற்கொண்டு வளாகங்களால் அனுப்பி வைக்கப்படும் விடயங்கள் உரிய வளாகங்களில் நிறுவனப்பண்புகளுக்கு அமைவாக பரிந்துரை செய்யபட்டதை ஆராய்ந்த பின்னரே அவ்விடயங்கள் தேசிய ஆண்டுக்கூட்டதில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படக் கூடியவையாக இருந்தால் அவ் விடயங்கள் பரிந்துரைகளாக தேசிய ஆண்டுக்கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படும். இதுவே பொதுவாக கடைப்பிடிக்கப்படும் நிறுவனப் பண்பாகும்.
தலைமை நிருவாகத் தெரிவு.
தேசிய ஆண்டுக் கூட்டத்திலேயே நிருவாகத் தெரிவுகளும் காலம் காலமாக இடம்பெற்று வருகின்றன. நிருவாகத் தெரிவானது சுழற்சி முறையில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. இந்த நிருவாகத் தெரிவானது 18 வயதிற்கும் 26 வயதிற்கும் உட்பட்ட 4 பேர் அடங்கிய நிருவாகத் தெரிவு ஒரு வருடம் இடம்பெற்றால், அடுத்த வருடத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட வளர்ந்தவர்களையும் உள்வாங்கும் வகையில் மூன்று நபர்களுக்கான நிருவாகத் தெரிவு இடம்பெறும். அவ்வகையில் 2024 இல் நடைபெறவுள்ள தேசிய ஆண்டுக் கூட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட வளர்ந்தவர்கள் மூன்று நபர்களுக்கான நிருவாகத் தெரிவு இடம்பெறவுள்ளதை அறியத்தருகிறோம். விண்ணப்பிப்பதற்கான இறுதித் நாள் 28.09.2024 (காலம் நீடிக்கப்பட்டுள்ளது).
எனவே அன்னைத் தலைமை நிருவாகத்தில் இணைந்து பணிபுரிய ஆர்வமுள்ளோர் வளாகங்களின் ஊடாக தங்கள் விண்ணப்பங்களை முறையாக சமர்ப்பிக்க முடியும்., அவை வளாகத்தால் பரிசீலிக்கப்பட்டு, ஆராயப்பட்டு தெரிவுக் குழுவினருக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிற்பதற்கு முன்னர் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள்.
1. வளாக அங்கத்தவராக இருத்தல் அவசியம்.
2. அன்னை பூபதி தமிழக் கலைக்கூடத்தின் முதுகெலும்பாகத் திகழும் யாப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டவாரக இருக்க வேண்டும். சட்டநெறி , பண்புநெறியுடன் நிறுவனத்தில் பணிபுரியக் கூடியவராக இருத்தல் வேண்டும்.
3. நிருவாகத்தில் இணைந்து செயற்பட ஊதியம் அற்ற பொறுப்புள்ள பணியைச் செய்ய அர்ப்பணிப்பு மிக்கவராகவும், நேரத்தை ஒதுக்கி பணிபுரியக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.
இவற்றை விட தெரிவுக் குழுவினர் தெரிவிற்கான வழிகாட்டி நடைமுறை விதிகள் ஒன்றை பின்பற்றி தமது பணியை மேற்கொள்கின்றனர்.
வளாகத்தில் அங்கத்தவர் அல்லாதோர்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் நேரடியான அங்கத்தவர்களாக இருத்தல் (15 வயதிற்கு குட்பட்ட பிள்ளைகள் வளாகத்தில் அங்கத்தவர்களாக கொண்டில்லாதோர்.தமிழ்க் கலைக்கூடத்தில் தமது பணிக்காக அன்னையால் இணைக்கப்பட்டுள்ளோர்) தமது சுயவிருப்பத்தை அன்னை தலைமை நிருவாகத்திற்கும், தெரிவுக்குழுவினருக்கும் தெரிவிக்கலாம். இவ்வாறு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் தேவை, தகுதி அடிப்படையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்
தெரிவுக்குழு
தெரிவுக்குழுவானது தேசிய ஆண்டுக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்படுகிறது. தெரிவுக்குழுவானது வளாகங்களில் இருந்து கிடைக்கப்பெறும் விண்ணப்பப்படிவங்கள் முறையாக வந்துள்ளதா என்பதை கரிசனையில் எடுத்து மீள் ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றை உறுதிப்படுத்தி அவ்விண்ணப்பப் படிவங்களை பரிசீலனை செய்து தங்களது முழுமையான பரிந்துரையை தேசிய ஆண்டு கூட்டத்திற்கு வழங்குவார்கள். தேசி ஆண்டுக்கூட்டம் சனனாயக முறையில் தெரிவுகளை மேற்கொள்ளும்.
தேசிய ஆண்டு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள், பரிந்துரைகள், நிருவாகப் பரிந்துரைகள் ஆகியவற்றை மேற்கொண்டு அன்னை பூபதி கலைக்கூடத்திற்கு மேலும் வலுச் சேர்த்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு உதவுமாறு அனைத்து அங்கத்தவர்களையும் அன்போடு வேண்டிக் கொள்கின்றோம்,
நன்றி