மேலைத்தேய கீழைத்தேய இசைகளில் மிகவும் அதிக பாவனையிலுள்ள சுரத்தட்டை மாணவர்கள் விரும்பிக் கற்பதுண்டு. காதுக்கினிய இசையைப் பல வாத்தியங்களின் சத்தங்களைத் தன்னகத்தே கொண்ட கலைக்கூடத்தில் சுரத்தட்டு வகுப்புகள் குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையுடன் போதிக்கப்படுகிறது. வீடுகளில் பயிற்சி செய்வதற்கு அதிக செலவு இல்லாததால், பலராலும் விரும்பப்படுகிறது. மேலும் தமிழ்மொழி இசையோடு மட்டும் நின்றுவிடாது வாழ்விடத்து இசையையும் இசைக்கும் கலையார்வத்தை தூண்டத்தக்கது. அன்னை பூபதி இசைக்குழுவின் உயிர்நாடியாக சுரத்தட்டு இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.?