எமது கலைக்கூடத்தின் சேவைகளைப் பெறுவதற்கு அங்கத்தினராக இணைதல் அவசியமாகும். இது எமது யாப்பு விதிகளின் நடைமுறையாகும். எம்மோடு இயங்கும் அனைத்து வளாகங்களுக்கும் அங்கத்துவ நிதிப்பங்களிப்பாக தனியொருவருக்கு வருடந்தோறும் 100 குரோனர்கள் அறவிடப்படும். வளாகக் கற்கைச் செயற்பாடுகள், கலைப் வகுப்புகள் போன்ற அனைத்திற்கும் வருடாந்த அங்கத்துவப் பங்களிப்பு முதன்மையானது. இவ் அங்கத்துவப் பங்களிப்பை வளாகங்களின் ஊடாகச் செலுத்த முடியும். தவணைக் கட்டணத்துடன் அங்கத்துவக் கட்டணத்தையும் செலுத்தலாம். நோர்வே பொதுவிதிகளுக்கு அமைவாக மேற்படி பங்களிப்பு எமது கலைக்கூடத்தின் தலைமை நிருவாகத்தால் அறவிடப்படுகிறது. தேசிய மட்டத்தில் எமது சேவைகளை மாணவர்கள் பெற்றுக் கொள்ள அங்கத்துவப் பங்களிப்பு இன்றியமையாதது.