எமது கலைக்கூடத்தின் சேவைகளைப் பெறுவதற்கு அங்கத்தினராக இணைதல் அவசியமாகும். இது எமது யாப்பு விதிகளின் நடைமுறையாகும்.
அன்னை பூபதி கலைக்கூட நிறுவனத்தின் அங்கத்தவர் கட்டணம் தனியொருவருக்கு வருடத்திற்கு 100  குரோனர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆயினும் நோர்வேயில் நடைமுறையில் உள்ள  விலைவாசி உயர்விற்கு ஏற்ப இக்கட்டணத்தில் மாற்றங்கள் இருக்கும். இக்கட்டணத்தைச் செலுத்தாதுவிடின் எமது சேவைகளைப் பெற முடியாது.
மாணவர்கள் அன்னை பூபதி கலைக்கூடத்தில் கற்பித்தல் மற்றும் கலைச் செயற்பாடுகளை எந்த வளாகத்தில் மேற்கொண்டாலும் தவணைக் கட்டணம், ஏனைய கட்டணங்களை செலுத்தினால் மட்டுமே அங்கத்துவத்தை தொடர்ந்து தக்க வைக்க முடியும். அங்கத்தினர் ஒருவருக்குள்ள உரிமை தொடர்பான விபரங்களை எமது கலைக்கூடத்தின் யாப்பைப் படித்து அறிந்துகொள்ளலாம்.  வளாகங்களுக்கான பொதுவான யாப்பு  பொதுவான நடைமுறைகளை எடுத்து இயம்புகின்றது. வளாகங்கள் தமது நடைமுறைகளை இதில் இணைத்து தமது யாப்பையும் பொது விதிகளையும் கொண்டிருக்கின்றது
வளாகங்களுக்கான பொதுவான யாப்பு.
தலைமைநிர்வாக யாப்பு