நடைபெறும் காலம் : 14.02.26
நேரம் : வழமையான வகுப்பு நேரங்களில் நடைபெறும்.
ஓவியப் போட்டி
1 ஆம் ஆண்டிலிருந்து 10 ஆம் ஆண்டு வரையானமாணவர்கள் தாம் விரும்பும் ஓவியத்தை வரையலாம்.
உறுப்பெழுத்துப்போட்டி
1 ஆம் ஆண்டிலிருந்து 4 ஆம் ஆண்டு வரையானமாணவர்களுக்கு எம்மால் வழங்கப்படும் சொல்லியத்தையோ அன்றி சொற்றொடரையோ பார்த்து எழுதுதல் வேண்டும்.
கட்டுரைப்போட்டி
5ஆம் ஆண்டிலிருந்து 10 ஆம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறும்.
மாணவர்கள் கட்டுரை எழுதுவதற்காக மூன்று வகையான கட்டுரைகள் வழங்கப்படும். அவற்றில் ஏதாவது ஒன்றினை மாணவர்கள் எழுதவேண்டும்.
மாணவர்கள் இலகுவாக எழுதுவதற்கும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் கட்டுரையின் அம்சங்களுக்கேற்ற குறிப்புகள் வழங்கப்படும். அவற்றைப் பயன்படுத்தி கட்டுரை எழுதலாம்.
கட்டுரை எழுதும் மாணவர்களின் கவனத்துக்கு
5,6 ஆம் ஆண்டு : 60 -75 சொற்கள்
7, 8 ஆம் ஆண்டு : 100 சொற்கள்
9,10 ஆம் ஆண்டு : 150 சொற்கள்
காலம்: 20.12.2025 நேரம்: 11.30 மணி.
துன்பத்திலிருந்து மக்களை மீட்டு மகிழ்ச்சியில் வாழ வைப்பதற்கே இயேசு இந்த மண்ணில் மனிதனாகப் பிறந்தார். விண்ணகம் விட்டு இறங்கி வந்த மீட்பர் இயேசு மண்ணில் பிறந்து உலகிற்கு தந்த அமைதி நம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமென வணங்கி இவ்விழாவைக் கொண்டாடவுள்ளோ.ம். இவ் விழாவை மழலையர், சிறுவர் மற்றும் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நடாத்தி சிறப்பிக்கவுள்ளனர்.
பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்