லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 20 – 2024 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 18.05.2024 Ukasinfo 20-2024

வணக்கம்!

கல்வி – சனிக்கிழமை - 09:00 -12:30 (10:45 - 11:15)
கல்வி சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு பாடசாலை 09.00-12.30 மணி வரையும் இடைவேளை நேரம் 10.45-11.15 வரை
கல்விச் செயற்பாடுகள்:
மற்றும் பரீட்சைகளை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், முள்ளிவாய்க்கால் கஞ்சி மற்றும் அறம் சார்ந்த அறிமுகத் திட்டம் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் உணர்வோடு வேண்டிக் கொள்கின்றோம்.

கலைவகுப்புகள் - சனிக்கிழமை
மே 18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தலை முன்னிட்டு எதிர்வரும்18.05.2024 சனிக்கிழமை அனைத்து கலை வகுப்புகளுக்கும் விடுமுறையாக அறிவிக்கின்றோம்.

18.05.2024 தமிழின அழிப்பு 15ம் ஆண்டு நினைவு நாள்.

அன்று எமது வளாகம் அறம் சார்ந்த ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
அதாவது மாணவர்களுக்கு அறம் சார்ந்த உணர்வை செயற்பாட்டு முறையில் புரிய வைப்பதற்காக இத்திட்டத்திற்கு மாணவர்கள் ஊடாக செயல் வடிவம் கொடுக்க உள்ளோம்.
ஆகவே அன்பார்ந்த பெற்றோர்களே!
மே 18 அன்று எமது பாடசாலையில் பொருட்கள் சேகரிக்க உள்ளோம். அதாவது உங்களிடம் உள்ள பாவித்த பொருட்கள் அது உங்கள் பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்களோ அல்லது ஆடை ஆபரணங்களோ உடுப்புகளோ பாதனிகளோ மின்னணு தவிர்ந்த எப்பொருட்கள் ஆயினும் உங்கள் பிள்ளைகள் ஊடாக மே 18 அன்று கொடுத்து அனுப்புங்கள்.
இப் பொருட்களை சேகரித்து எமது தாயகத்திலே வறுமை கோட்டுக்குள் வாழும் எமது உறவுகளுக்கு கொடுத்து உதவ உள்ளோம்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் உங்கள் வைபர் குழுமங்கள் ஊடாக அறிய தரப்படும்.

விளையாட்டுப்போட்டி 2024
விளையாட்டு போட்டிக்கான திட்டங்கள் இந்த வாரம் சிகப்பு இல்லத்திற்கு இடைவேளைக்கு முன்பும் மணி 09:45 – 10.30 மஞ்சள் இல்லத்திற்கு பின்பும் மணி 11:30 – 12:15 Samlingsal ஒதுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு போட்டி பயிற்சிகள் (1-10ஆம் வகுப்பு):
செவ்வாய்க்கிழமைகள் 18:00-19:30 Lillestrøm (Leiraveien 2, 2000 Lillestrøm)
ஞாயிற்றுக்கிழமைகள் 16:00-17:30 på Stovner (Smiuvegen 253, 0981 Oslo)

மேலதிக விபரங்களை இணையத்தில் பார்வையிடவும்.

விளையாட்டுப் போட்டி தொடர்பான சில முக்கிய தகவல்கள்
விளையாட்டுப்போட்டிகள்
Innmelding til TBUK

Link
INNMELDING TIL TAMILSK BARN OG UNGDOM IDRETTSKLUBB. (Frist 17.05.2024 kl:23:59)
PÅMELDING TIL LEKER (Frist 20.05.2024 kl:23:59)

நிதி 2024
எதிர்வரும் விளையாட்டு போட்டி, பாடசாலை சார்ந்த பொறுப்புகள் மற்றும் கல்வி ஆண்டு 2024/2025 பங்கு பெறுவதற்கு முழுமை பெற்ற அங்கத்தவராக இருக்க வேண்டும்.
முழுமை பெற்ற அங்கத்தவர் உரிமை பெறுவதற்கு HØST 2023 வரையான தவணைக் கட்டணங்களை செலுத்தியவர்களாக இருத்தல் வேண்டும்.

புதிதாக இணைந்து இன்றுவரை விலைப்பட்டியல் கிடைக்காதவர்கள் முழுமை பெற்ற அங்கத்தவர்கள் ஆவர்.
முழுமை பெற்ற உறுப்பினர் பட்டியல் Viber குழுமங்களில் அனுப்பப்படும்.
இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.
மின்னஞ்சல்: faktura.lorenskog@annai.no

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
08.06.2024 கல்வி ஆண்டின் இறுதி நாளும் கோடைகால ஒன்று கூடலும்.
09.06.2024 விளையாட்டுப்போட்டி.

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்

Ukasinfo_20-2024 (PDF)