லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 23 – 2024 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 08.06.2024 Ukasinfo 23-2024

வணக்கம்!

கடந்த வாரம் அனைத்துலக ஆண்டிறுதித் தேர்வு 2024 மிகச்சிறப்பாக நடைபெற்றது. வேறு வளாகங்களிலிருந்து தேர்வுக்காகப் பணியாற்ற வந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது நன்றி.

கல்வி – சனிக்கிழமை - 09:30 -12:30 (10:30 – கோடைகால ஒன்றுகூடல்)
பாடசாலை வழமைபோல் 09.30 மணிக்கு ஆரம்பமாகும். இவ்வாரம் மாணவர்களுக்கான தேர்ச்சி அட்டைகள் வகுப்பாசிரியர்களால் வழங்கப்படும்.

அன்னை பூபதி லோறன்ஸ்கூக் வளாகத்தின் கல்வியாண்டு 2023-2024 எதிர்வரும் 08.06.2024 ஒன்றுகூடலுடன் மற்றும் 09.06.2024 விளையாட்டுப் போட்டியுடன் நிறைவு பெறுகின்றது என்பதனை அறியத்தருவதோடு அனைவருக்கும் கோடைகால விடுமுறை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துநிற்கின்றோம்.
அடுத்த கல்வியாண்டுத் தொடக்கம் 24.08.2024 என்பதனையும் அறியத்தருகின்றோம்.

கோடைகால ஒன்றுகூடல் 08.06.2024 அன்று 10:30 மணிக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் வளாக நலன்விரும்பிகளுடன் அன்றைய கால நிலைக்கு ஏற்ப மாற்றங்களுடன் ஒன்று கூடல் நடைபெறும். அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். சில உணவுவகையில் ஒவ்வாமை உள்ள மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கவனத்திற்கொள்ளல் அவசியம்!
ஒன்றுகூடலுக்கான அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.


தாயகம் நோக்கிய அறம் சார்ந்த செயற்பாட்டிற்கான எமது வளாக மூன்றாம் வகுப்பு ஆசிரியர் திருமதி புஷ்பா அரவிந்தன் அவர்களின் ஓவிய கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறும்.

கலைவகுப்புகள் - சனிக்கிழமை
கோடைகால ஒன்றுகூடல் என்பதனால் விடுமுறை.

விளையாட்டுப்போட்டி 09.06.2024
-2024 விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழ் மற்றும் நேர அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.

Tidsskjema APTKLV_Sport_2024 start_og slutt- Endelig (2)

விளையாட்டுப் போட்டி தொடர்பான பெற்றோருடனான முதலாவது கூட்டத்தில் இரண்டு வளாகங்களின் ஒப்புதலோடு எடுக்கப்பட்டிருக்க வேண்டிய தீர்மானமான இல்லங்களின் பெயர் தவிர்ப்பு என்பது தவறான புரிதலோடு நடைமுறைக்கு வந்ததற்கு வருந்துகிறோம்.
இத்தவறை நிவர்த்தி செய்யும் முகமாக இரு வளாகங்களும் இணைந்த ஒப்புதலோடு ஒரு தீர்வுக்கு வந்துள்ளோம். அதாவது இல்லங்கள் சிவப்பு, மஞ்சள் என்ற பெயர் சூட்டப்பட்ட வர்ணங்களிலேயே அலங்காரங்கள் அமையும்.
ஆனால் ஒலிவாங்கியில் அறிவிக்கும் போது மட்டும் பூபதி இல்லம் மஞ்சல் என்றும் திலீபன் இல்லம் சிவப்பு என்றும் அறிவிக்கப்படும்.
இத்தகவலை புரிந்துணர்வோடு ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம்.
ஒற்றுமையே பலம்

நிதி 2024
எதிர்வரும் விளையாட்டு போட்டி, பாடசாலை சார்ந்த பொறுப்புகள் மற்றும் கல்வி ஆண்டு 2024/2025 பங்கு பெறுவதற்கு முழுமை பெற்ற அங்கத்தவராக இருக்க வேண்டும்.

அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்குள் இலை தளிர் காலத்திற்கான (Vår) 2024 தவணைக் கட்டணங்களுக்கான விலைப்பட்டியல் (faktura) அனுப்பப்படும். இதை கவனத்தில் கொண்டு உரிய காலத்துக்குள் கட்டணங்களை செலுத்தும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்.

இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.
மின்னஞ்சல்: faktura.lorenskog@annai.no

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்

Ukasinfo_23-2024 (pdf)