லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 22– 2024 – ஒலிப்பதிவுடன் அறிவித்தல்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 01.06.2024 Ukasinfo 22-2024

வணக்கம்!

கடந்த வாரம் முதலாம் ஆண்டு அ, ஆ பிரிவு மாணவர்களின் கண்காட்சி மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் இருந்து. இதை வழிநடத்திய வகுப்பு ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், முதலாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் குறிப்பாக முதலாம் வகுப்பு அ, ஆ பிரிவு மாணவர்களுக்கு சிறப்பான பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அத்தோடு 10ஆம் வகுப்பு தலைமையில் நடைபெற்ற தேநீர்ச்சாலை மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது. இதை சிறப்பாக வழி நடத்தி பேருதவி புரிந்த வகுப்பு ஆசிரியருக்கும், 10ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கும்,
மற்றும் மிகுந்த ஆர்வத்தோடு செய்து முடித்த மாணவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

கல்வி – சனிக்கிழமை - 09:30 -12:30 (10:45 - 11:15)

தொடக்கநிலை, மழலையர் மற்றும் சிறுவர்நிலை மாணவர்களுக்கு வழமையான பாடசாலை இடம்பெறும்.

1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 01.06.2024 சனிக்கிழமை அனைத்து உலகத் தேர்வு நடைபெற இருப்பதால் மாணவர்களுக்கு இடைவேளை இன்றி தேர்வு நடைபெறும். ஆகவே பிள்ளைகளுக்கு உணவுப் பொதி மற்றும் நீர் புத்தகப் பையுடன் கொடுத்து அனுப்பவும்.

தேநீர்ச்சாலை வழமை போல் இயங்கு நிலையில் இருக்கும்.

கலைவகுப்புகள் - சனிக்கிழமை
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.

விளையாட்டுப்போட்டி 09.06.2024
பதிவுகள் நிறைவுக்கு வந்துள்ளது.

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிக்கான நடைமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது, வழமையான நடைமுறைக்கு மாறாக சூழ்நிலைக்கு ஏற்ப சில மாற்றங்களோடு குழை எடுத்தல் மற்றும் அஞ்சல் ஓட்டம் போன்ற குழு நிலை விளையாட்டுக்கள் நடைபெறும்.
APTK Lørenskog og Veitvet Sportsregler 2024

விளையாட்டு போட்டிக்கான திட்டங்கள் இந்த வாரம் மஞ்சள் இல்லத்திற்கு இடைவேளைக்கு முன்பும் மணி 09:45 – 10.30 சிகப்பு இல்லத்திற்கு பின்பும் மணி 11:30 – 12:15 Samlingsal ஒதுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு போட்டி பயிற்சிகள் (1-10ஆம் வகுப்பு):
செவ்வாய்க்கிழமைகள் 18:00-19:30 Lillestrøm (Leiraveien 2, 2000 Lillestrøm)
ஞாயிற்றுக்கிழமைகள் 16:00-17:30 på Stovner (Smiuvegen 253, 0981 Oslo)

நிதி 2024

எதிர்வரும் விளையாட்டு போட்டி, பாடசாலை சார்ந்த பொறுப்புகள் மற்றும் கல்வி ஆண்டு 2024/2025 பங்கு பெறுவதற்கு முழுமை பெற்ற அங்கத்தவராக இருக்க வேண்டும்.
முழுமை பெற்ற அங்கத்தவர் உரிமை பெறுவதற்கு HØST 2023 வரையான தவணைக் கட்டணங்களை செலுத்தியவர்களாக இருத்தல் வேண்டும்.

புதிதாக இணைந்து இன்றுவரை விலைப்பட்டியல் கிடைக்காதவர்கள் முழுமை பெற்ற அங்கத்தவர்கள் ஆவர்.
முழுமை பெற்ற உறுப்பினர் பட்டியல் Viber குழுமங்களில் அனுப்பப்படும்.
இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.
மின்னஞ்சல்: faktura.lorenskog@annai.no

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
08.06.2024 கல்வி ஆண்டின் இறுதி நாளும் கோடைகால ஒன்று கூடலும்.
09.06.2024 விளையாட்டுப்போட்டி.

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்

Ukasinfo_22-2024 PDF