லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 21 – 2024 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 25.05.2024 Ukasinfo 21-2024

வணக்கம்!

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், அறம் சார்ந்த அறிமுகத் திட்டம் மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி போன்ற நிகழ்வுகள் கடந்த சனி மிகவும் சிறப்பாக நடந்தேறியது. இதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகளுடன் கூடிய வாழ்த்துகள்.

கல்வி – சனிக்கிழமை - 09:30 -12:30 (10:45 - 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும் அத்துடன் சில வகுப்புகளில் தேர்வும் நடைபெறும்.

முதலாம் அ, ஆ வகுப்பு மாணவர்களும் அவர்களுடைய ஆசிரியர்களான கௌரி ஆறுமுகதாஸ், சத்தியா இராஜேந்திரம் ஆசிரியர்களும் அந்த வகுப்பு பிள்ளைகளின் பெற்றோரும் இணைந்து படித்த சொற்களை வைத்து கண்காட்சி ஒன்றை எதிர்வரும் 25.05.2024 சனிக்கிழமை அன்று எமது பாடசாலையில் நடத்த உள்ளனர். இவர்களின் ஆக்கத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஊக்கப்படுத்தும் வண்ணம் அனைத்து ஆசிரியர்களையும், மாணவர்களையும், பெற்றோர்களையும் வேண்டிக் கொள்கின்றோம்.

 

தேர்வை வேறு நாடுகளில்/இடங்களில் எடுக்க விரும்பும் மாணவர்களின் முழுப் பெயர், சுட்டெண், பிறந்ததிகதிஎடுக்க விரும்பும் இடம் ஆகியவற்றை 24.05 முன் அறியத் தாருங்கள். நாம் உரிய முறையில் தேர்வுமண்டபங்களுக்கு அறிவிக் வேண்டும். மாணவர்கள் அடையாள அட்டை எடுத்துச் செல்லவேண்டும்.

கலைவகுப்புகள் - சனிக்கிழமை
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.

விளையாட்டுப்போட்டி 2024
விளையாட்டு போட்டிக்கான திட்டங்கள் இந்த வாரம் சிகப்பு இல்லத்திற்கு இடைவேளைக்கு முன்பும் மணி 09:45 – 10.30 மஞ்சள் இல்லத்திற்கு பின்பும் மணி 11:30 – 12:15 Samlingsal ஒதுக்கப்பட்டுள்ளது.

TBUK இல் பதிவு செய்வதற்கான முடிவுத்திகதி: 22.05.2024 நேரம்: 23.59
விளையாட்டுகளைப் பதிவுசெய்வதற்கான முடிவுத்திகதி: எதிர்வரும் சனிக்கிழமை 25.05.2024 நேரம்: 23:59
25.05.2024 இற்குப் பின்பு எந்தவொரு காரணத்திற்காகவும் விளையாட்டுப்போட்டி 2024 இல் பதிவு செய்ய ஒப்புதல் வழங்கப்படமாட்டாது. ஏதேனும் கேள்விகள் இருப்பின் danshiyas@annai.no என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
Minner om at fristen for å melde seg inn i TBUK er i morgen 22.05 (gjelder for alle fra 1-10 klasse) og at dette må være i orden for å garantere at man får meldt seg på innen fristen 25.05 (gjelder alle).

Etter 25.05 vil det IKKE være mulig å melde seg til sportsmeet 2024. Om det er noen spørsmål kan dere sende en Mail danshiyas@annai.no
விளையாட்டு போட்டி பயிற்சிகள் (1-10ஆம் வகுப்பு):
செவ்வாய்க்கிழமைகள் 18:00-19:30 Lillestrøm (Leiraveien 2, 2000 Lillestrøm)
ஞாயிற்றுக்கிழமைகள் 16:00-17:30 på Stovner (Smiuvegen 253, 0981 Oslo)

மேலதிக விபரங்களை இணையத்தில் பார்வையிடவும்.

விளையாட்டுப் போட்டி தொடர்பான சில முக்கிய தகவல்கள்
விளையாட்டுப்போட்டிகள்
Innmelding til TBUK

Link
INNMELDING TIL TAMILSK BARN OG UNGDOM IDRETTSKLUBB. (Frist 22.05.2024 kl:23:59)
PÅMELDING TIL LEKER (Frist 25.05.2024 kl:23:59)

தேநீர்ச்சாலை
இவ்வாரம் தேநீர்ச்சாலை 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தலைமையில் நடைபெறும்.


நிதி 2024
எதிர்வரும் விளையாட்டு போட்டி, பாடசாலை சார்ந்த பொறுப்புகள் மற்றும் கல்வி ஆண்டு 2024/2025 பங்கு பெறுவதற்கு முழுமை பெற்ற அங்கத்தவராக இருக்க வேண்டும். முழுமை பெற்ற அங்கத்தவர் உரிமை பெறுவதற்கு HØST 2023 வரையான தவணைக் கட்டணங்களை செலுத்தியவர்களாக இருத்தல் வேண்டும்.

புதிதாக இணைந்து இன்றுவரை விலைப்பட்டியல் கிடைக்காதவர்கள் முழுமை பெற்ற அங்கத்தவர்கள் ஆவர்.
முழுமை பெற்ற உறுப்பினர் பட்டியல் Viber குழுமங்களில் அனுப்பப்படும்.
இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.
மின்னஞ்சல்: faktura.lorenskog@annai.no

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
08.06.2024 கல்வி ஆண்டின் இறுதி நாளும் கோடைகால ஒன்று கூடலும்.
09.06.2024 விளையாட்டுப்போட்டி.

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்