றொம்மன்

ஆண்டுப் பொதுக்கூட்டம்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட றொம்மன் வளாகத்தின் வருடாந்த ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 27.04.2024 சனியன்று 15.00 - 18.00 மணி வரை நேரடியாகவும் இணையமுற்றத்திலும் இடம் பெறுவதற்கான முன் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

14.00 மணிக்கு வரவுப்பதிவு செய்யப்படும். அங்கத்தவர்கள் 14:00 மணிக்கு வருகைதர வேண்டும்.

குறிப்பு:

மேலும் 15.03.24 வெள்ளியன்று எமது சட்டவாளருடன் எமது வளாக சார்பில் சில நிருவாக உறுப்பினர்களும் எதிர்த்தரப்பு பெற்றோர் ஒருவரின் சட்டவாளர்களுடன் வருகை தந்திருந்த சில பெற்றோருடன் சந்திப்பை மேற்கொண்ட போது குறிப்பிட்ட பெற்றோர் தனது சட்டத்தரணியூடாக பொதுவான நோர்வேயியர்களை வைத்து ஆண்டுக்கூட்டத்தை நடாத்த வேண்டுமென்றும், கூட்ட நடத்துநர், வாக்குகளை எண்ணும் கண்காணிப்பாளர் ஆகியோர் வெளியிலிருந்து பொதுவான நோர்வேயியராக இருக்க வேண்டுமென்றும் கோரிக்கையை முன்வைத்தனர். எமது சட்டத்தரணி இவற்றை ஆண்டுக் கூட்டத்தினை நடாத்துவதற்கான இவர்களின் கருத்தாக எடுத்துக் கொள்வதாகக் கூறினார். இதற்கமைவாக நாம் பல நோர்வையிய அமைப்புக்களையும்,வேறு சிலரையும் பயன்படுத்தி ஆண்டுக்கூட்டத்தை நடாத்துவதற்கு உதவி செய்ய கேட்டுள்ளோம்.

றொம்மன் வளாக ஆண்டுக்கூட்டம் யாப்பின் விதிகளுக்கு அமைவாகவும் அனைத்து அங்கத்தவர்களையும் இணைத்து நடாத்தவுள்ளோம்.
நன்றி -

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட றொம்மன் நிருவாகம் 2024