தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்லவிளையாட்டுப் போட்டிகள் 02.06.24 ஞாயிற்றுக்கிழமை 10:00 மணிக்கு Lambertseter friidrettsbane விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
நீங்கள் உங்கள் பிள்ளைகளை பதிவு செய்ய வேண்டியவை
1. அங்கத்தவர் பதிவு ( Tamilsk barn og ungdom idrettsklubb ) (முகவரி)).
இணையத்தில் பதிவு செய்வதை இலகுவாக்குவதற்குரிய ஆவணம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. https://www.poopathi.no/web_toyen/sites/default/files/infromasjon_filer/online_registrering_for_tbuk.pdf
2. வழமைபோல் உங்கள் பிள்ளைகள் விரும்பும் போட்டிகளை இவ்விணைப்புக்குள் சென்று பதிவு செய்தல் வேண்டும் (முகவரி). இவ்விணைப்பு வெள்ளிக்க்கிழமை பின் பதிவு செய்யலாம்.
மாணவர்களின் விளையாட்டுப்பதிவுகளுக்கான பற்றுச்சீட்டு(Faktura) உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும், என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆகவே, 18.05.2024க்குள் பதிவு செய்து, அதற்கான கட்டணங்களை செலுத்திருக்க வேண்டும்.
நன்றி
இவ்வண்
தொய்யன் வளாகம்.
வருடாந்தப்பொதுக்கூட்டத்தின்(Årsmøte) நிகழ்ச்சிநிரலைப்(Agenda) பார்ப்பதற்கு இங்கே அழுத்துவும்.
எதிர்வரும் சனிக்கிழமை 09/03/2024, மதியம் 14.00க்கு அன்று பேச்சுப்போட்டிக்கான இறுதிப்போட்டி மொட்டன்ஸ்றூட் வளாகத்துடன் இணைந்து நடைபெறும், என்பதை அறிய தருகிறோம்.
முகவரி (Adresse):-
Stenbråten skole,
Hans breiens vei 10
1283 Oslo
பெற்றோர்களே இக்கூட்டத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளவேண்டுமென எண்ணும் விடயங்கள், வினாக்களை 02.03.2024க்கு முன் எழுத்து மூலமாகவோ, நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ நிருவாகத்திடம் சமர்ப்பிக்கவும். அத்துடன் எமது நிர்வாகத்திற்கு புதியநிர்வாகிகள் தேவையாக உள்ளது .
பெற்றோர்களோ,அல்லது இளையவர்களோ இணைந்து செயற்பட விரும்புகிறவர்கள் தெரிவுக்குழுவையோ அன்றி நிர்வாகத்தையோ அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆண்டுக்கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல் 02.03.2024க்கு பின் தெரிவிக்கப்படும்.
மின்னஞ்சல் முகவரி: toyen@annai.no
நன்றி,
இவ்வண்
தொய்யன் வளாகம்
நிருவாகம்
கீழுள்ள இணைப்புக்குள் சென்று இப்போட்டிக்கு மாணவர்களை பதிந்துக் கொள்ளுங்கள்.
https://forms.office.com/e/H3rHXZCat7?origin=lprLink
1) சிறுவர் பிரிவு – கதை சொல்லும் போட்டி (2018 பிறந்தோர்).
2) ஆண்டு 1 முதல் ஆண்டு 7 வரையான மாணவர்களுக்கான பேச்சுக்கள் ஆண்/பெண் இருபாலாருக்கும் இடம்பெறும்.
விண்ணப்ப முடிவு திகதி – 11.02.2024
தெரிவுப்போட்டி இறுதிப்போட்டி
திகதி: 02.03.2024 திகதி: 09.03.2024
இடம்: தொய்யன் வளாகம் (Bryn Skole) இடம், நேரம் பின்னர் அறியத் தரப்படும்.
நேரம்: 13.30
நன்றி,
தொய்யன் வளாகம்
நிருவாகம்