லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 07 – 2024 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வாராந்தத் தகவல் 17.02.2024 Ukasinfo 07-2024

வணக்கம்!

-கல்வி – சனிக்கிழமை - 09:30 -12:30 (10:45 - 11:15)

வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
-அன்னை தமிழ்முற்ற தெரிவு போட்டிகள் 09.03.2024 லோறன்ஸ்கூக் வளாகத்தில்.
-அன்னை தமிழ்முற்ற இறுதி போட்டிகள் 16.03.2024 ரொம்மன் வளாகத்தில்.
அன்னை தமிழ்முற்ற போட்டிகள் 2024 விபரம் – எழுத்து மற்றும் ஒலிவடிவத்துடன்.

-கலைவகுப்புகள்.
கலை வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்கும் நோக்குடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பி பயன்பெறுங்கள்.
இந்த முன் பதிவுக்கான கால எல்லை இம்மாத இறுதிவரை அதாவது 29.02.2024 வரை மட்டுமே.
இதற்கான முன்பதிவுப் படிவம் இணைக்கப்பட்டுள்ளது.
முன்பதிவினூடாக உள்வாங்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பி தெரிவு செய்யும் மேற்குறிப்பிட்ட கலை பாடங்கள் சித்திரை விழா வரை எந்தவித கட்டண அறவீடு இன்றி இலவசமாக பயிற்ச்சி கொடுக்கப்பட்டு சித்திரை விழாவில் அரங்கேற்றப்படும்.

தொடர்புகளுக்கு கலைப்பொறுப்பாளர்
கை தொ பே இல: 400 58 232
மின்னஞ்சல் முகவரி: thuratharang@annai.no

-ஆண்டுக்கூட்டம் 2024 – 02.03.2024
02.03.2024 அன்று எமது ஆண்டுக்கூட்டம் நடைபெற இருப்பது அனைவரும் அறிந்ததே!
குறிப்பு:
ஆண்டுக்கூட்டத்திலே அனைவரும் பங்கேற்கலாம். ஆனால் கேள்வி கேட்கும் தகைமைக்கு உரித்தானவர்கள் முழுமை பெற்ற அங்கத்தவர்கள் மட்டுமே! அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு (vår) இலைதளிர் காலம் வரையான தவணைக் கட்டணங்களை செலுத்தியவர்களாக இருத்தல் வேண்டும்.
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளவும். இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல் முகவரி: nandhakumarj@annai.no

-எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
02.03.2024 ஆண்டுக்கூட்டம் 2024
16.03.2024 விளையாட்டுப்போட்டி 2024 - பெற்றோர் கூட்டம்
13.04.2024 சித்திரை விழா
09.06.2024 விளையாட்டுப்போட்டியும் கல்வியாண்டு நிறைவும்.

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும்மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

-ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்