லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 02 – 2024 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

இணைப்புகளைப் பார்க்கவும்:

பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 02-2024

Ukas info for uke 02-2024

உள்ளடக்கம்
-கல்வி & கலை – 13.01.2024 -விடுமுறை
-தைப்பொங்கல் விழா 2024 13.01.2024
13.01.2024 அன்று நடைபெற இருக்கும்பொங்கல் விழாவிற்கு எமது வளாகத்தின் பொறுப்புகள் பின்வருமாறு:
குழு 1 - கதிரைகள் ஏற்றி இறக்கி மண்டபத்தினுள் அடுக்குதல்.
நேரம்: 12.01.2024 வெள்ளிக்கிழமை, மாலை 18.00 மணிக்கு
இடம்: Leiraveien 2, Lillestrøm, Skedsmohallen
பொறுப்பு: பெற்றோர் குழு

குழு 2 - நிகழ்வு நாளன்று காலையில் தேநீர் வைத்தல்.
நேரம்: 13.01.24 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு
பொறுப்பு: தேநீர்ச்சாலை குழு மற்றும் பெற்றோர் குழு

குழு 3 - சமையலுக்கு மரக்கறி வகைகளை வெட்ட உதவுதல்.
நேரம்: 12.01.2024 வெள்ளிக்கிழமை, மாலை 18.00 மணிக்கு
இடம்: Rommen வளாகம்.
பொறுப்பு: தேநீர்ச்சாலை குழு

குழு 4 - உணவு தயார் செய்ய உதவி புரிதல்.
நேரம்: 13.01.24 சனிக்கிழமை அதிகாலை 02.00 மணிக்கு
இடம்: Kalbakken மகாராஜா உணவகம்.
பொறுப்பு: தேநீர்ச்சாலை குழு

குழு 3 மற்றும் 4 ஆகிய பொறுப்புகளை ஏற்க பெற்றோர்களின் உதவி தேவைப் படுகிறது. முக்கியமாக பொங்கல் விழா முடிந்த பின்னர், குழு 1க்கு உதவி தேவைப் படுகிறது.

உதவி செய்ய விருப்பம் உள்ள பெற்றோர்கள் கலை அல்லது பெற்றோர் குழு பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.
துராதரன் கணேசமூர்த்தி - கலை – 40058232
குணேந்திரன் ஆரியதாஸன் - பெற்றோர் குழு – 41673165

-நிர்வாகத் தெரிவுக்குழு 2024
-நிதி 2024
-ஆண்டுக்கூட்டம் 2024
ஆண்டுத்திட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது போல் எதிர்வரும் 10.02.2024 நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நாளில் தவிர்க்க முடியாத காரணத்தால் நடத்தமுடியாத சூழ்நிலைக்கு வருந்துகின்றோம். பதிலாக விரைவில் பொருத்தமான நாளை தெரிவு செய்து அடுத்த வாராந்த தகவலில் அறியத்தருகின்றோம்.

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்