லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 50 – 2023 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

இணைப்புகளைப் பார்க்கவும்:

பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 50-2023

Ukas info for uke 50-2023

உள்ளடக்கம்
-நத்தார் விழா 2023 16.12.2023
16.12.2023 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென் மண்டபத்தில் நத்தார் விழா ஆரம்பமாகும்.
அனைத்து அங்கத்தினரையும் அன்போடு வரவேற்று கொள்கின்றோம். அத்தோடு இந்நாளே இவ்வாண்டின் இறுதி பாடசாலை நாளுமாகும். அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துகள்.
அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் இணைப்பை பார்க்கவும்.
மதிப்பளிப்பு நிகழ்ச்சியில்...
• தமிழ்த்தேர்வுகளுக்கான வகுப்புகள் நடாத்திய ஆசிரியர்களை மதிப்பளித்தல்.
• கல்வியாண்டு 2022-2023 இல் 10ஆம் வகுப்பினை நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல்.
• கலைப்பாடத் தேர்வுகள் எடுத்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படும்.
• அறிவாடல் போட்டியில் பங்குகொண்ட மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கல்.
• மாவீரர் நினைவாக நடாத்தப்பட்ட ஓவியப்போட்டியில் பங்கேற்ற மற்றும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கல்.
• புதிய நிர்வாக அறிமுகம் இடம்பெறும்.
-நிர்வாகத் தெரிவுக்குழு 2024
-தைப்பொங்கல் விழா 2024 (13.01.2024)
-நிதி 2023

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்