வணக்கம்!
அனைவரும் இலையுதிர் கால விடுமுறையை சிறப்பாக களித்திருப்பீர்கள் என நம்புகின்றோம்.
🎓கல்வி – 11.10.2025 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்
🪔 நிதி 2025
2025 ஆம் ஆண்டு அங்கத்துவ கட்டணம், அன்னை தலைமை நிர்வாகத்தால் அறவிடப்பட்டபடி, இன்னும் பலர் செலுத்தவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இன்னும் கட்டணம் செலுத்தாத அங்கத்தவர்கள் விரைவில் கட்டணம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும், கட்டணங்கள் செலுத்தாமல் நிலுவையில் உள்ள அங்கத்தவர்கள் கவனத்திற்கு —
கட்டணம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கணக்காளர் அல்லது பொறுப்பாளர் அவர்களை 21.10.2025 (சனிக்கிழமை)க்கு முன்னர் தொடர்பு கொள்ளவும். அவ்வாறு தொடர்பு கொள்ளத் தவறினால்,
நாங்கள் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை
மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
11.10.2025 – மழலையர் முற்றம்
18.10.2025 – திருக்குறள் தெரிவு போட்டி
25.10.2025 – தேசிய மட்டத்திலான திருக்குறள் போட்டி
26.10.2025 – அனைத்துலக அறிவாடல் போட்டி
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
வணக்கம்!
🌸 நவராத்திரி நல்வாழ்த்துக்கள்! 🌸
அன்பார்ந்த பெற்றோர்களே,
எதிர்வரும் 27.09.2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென் மண்டபத்தில், அன்னை லோறன்ஸ்கூக் வளாகத்தின் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு கல்வி மற்றும் கலை வகுப்புகள் நடைபெறமாட்டாது.
எமது வளாகத்தின் செயற்பாடுகள் மற்றும் இப்படியான பண்பாட்டுத் திருவிழாக்கள் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற, உங்கள் பங்குபற்றலும் ஆதரவும் அவசியம்.
👉 நவராத்திரி விழா நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது.
உங்கள் வருகையால் எங்கள் விழா இன்னும் பிரகாசமாகும். அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்!
அன்புடன்,
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
நவராத்திரி நிகழ்ச்சி நிரல் 2025
வணக்கம்!
கல்வி – சனிக்கிழமை (20.09.2025)- 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
நவராத்திரி விழா – 27.09.2025 சனிக்கிழமை
நவராத்திரி விழா நிகழ்ச்சிக்கான பயிற்சியை முன்னிட்டு, வகுப்பு ஆசிரியர்கள் தங்களின் பயிற்சி நேரங்களை அவர்களது Viber குழுமத்தில் தெரிவிப்பார்கள்.
அன்புடைய பெற்றோர்களே, ஆசிரியர்கள் அறிவிக்கும் நேரங்களில் குழந்தைகள் பயிற்சியில் பங்கேற்கும்படி தங்களின் ஒத்துழைப்பை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கலை வகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
பெற்றோர்களுக்கான தகவல்
Åsen பள்ளியிலிருந்து கடந்த சில வாரங்களாக, சுத்தம் பேணப்படவில்லை என்பதற்கான புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன. எனவே,
• பயன்படுத்திய இடங்களை சுத்தமாக வைத்திருக்கவும்,
• நாற்காலிகள் மற்றும் பொருட்களை எடுத்த இடத்திலிருந்து மீண்டும் அதே இடத்தில் வைத்து ஒழுங்கு பேணவும்,
உங்களின் ஒத்துழைப்பை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
27.09.2025 நவராத்திரி விழா
18.10.2025 திருக்குறள் போட்டி
08.11.2025 மாவீரர் ஓவியப்போட்டி
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
வணக்கம்!
கல்வி – சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
தியாக தீபம் திலீபனின் நினைவு சுமந்த புகைப்பட கண்காட்சி (11:30 – 12:30 )
தமிழ் இளையோர் அமைப்பினர் நடாத்தும் தியாக தீபம் திலீபனின் நினைவு சுமந்த புகைப்பட கண்காட்சி.
எதிர்வரும் 13.09.2025 சனிக்கிழமை 11.30 மணிக்கு ஓசன் பாடசாலை மேற் கட்டட கீழ்மாடி மண்டபத்தில் 5-11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு காண்பிக்கப்பட உள்ளது.
கலைவகுப்புகள் – சனிக்கிழமை
நவராத்திரி விழா சிறப்பு நடன நிகழ்ச்சி – வரவிருக்கும் நவராத்திரி விழாவை முன்னிட்டு, எமது வளாகத்தில் கலையார்வம் கொண்ட மாணவர்களை ஒன்றிணைத்து ஒரு சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
🎶 யார் கலந்து கொள்ளலாம்?
👉 6ஆம் வகுப்பு முதல் மேல்வகுப்பு வரை உள்ள மாணவர்கள்.
💃 எப்படி பங்கேற்பது?
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள், 18ம் திகதி வியாழக்கிழமைக்கு முன்னர் கலைப்பொறுப்பாளரை தொடர்பு கொள்ளவும்.
இந்த விழாவில் தங்களது திறமையை வெளிப்படுத்தி, நம் நவராத்திரி கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்குங்கள்!
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
27.09.2025 நவராத்திரி விழா
18.10.2025 திருக்குறள் போட்டி
08.11.2025 மாவீரர் ஓவியப்போட்டி
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
வணக்கம்!
கல்வி – சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும். 2025-2026 கல்வியாண்டுத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
11ம் வகுப்பு சனிக்கிழமை 9.30ற்கு ஆரம்பமாகும். கீழ் மாடி கட்டிடத்தில்
மழலையர் முற்றம்
திகதி : 11.10.2025 (சனிக்கிழமை), நேரம்: மதியம் 13.00 மணி
👧👦 பங்கேற்பு
* 2020, 2021, 2022 ஆம் ஆண்டு பிறந்த ஆண் / பெண் மழலையர் அனைவருக்கும் – வளாகங்களில் கல்வியை ஆரம்பிக்காத மழலைகளும் இணைந்து கொள்ளலாம்.
🎤 நிகழ்வில் மழலையர் வெளிப்படுத்தும் திறன்
* சிறுவர் பாடல்கள் (திரைப்படப் பாடல்கள் தவிர, பாப்பா பாடல்கள் ஏற்கப்படும்)
* சிறுவர் கதைகள் சொல்லல்
📝 பதிவு செய்வது மிக அவசியம்
இணைப்பை அழுத்தவும் https://forms.office.com/e/6V9vJVRX4F
* மேலே இணைக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்
கடைசி நாள் : 03.10.2025 (வெள்ளிக்கிழமை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
கலைவகுப்புகள் – சனிக்கிழமை
வழமைபோல் வழங்கப்பட்ட நேரத்தில் நடைபெறும். மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
27.09.2025 நவராத்திரி விழா
25.10.2025 திருக்குறள் போட்டி
08.11.2025 மாவீரர் ஓவியப்போட்டி
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
வணக்கம்!
கல்வி – சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
புதிதாக இணையவிருக்கும் மாணவர்களை இணைப்பதற்கான படிவங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அப்படிவங்களை நிரப்பி அலுவலகப் பொறுப்பாளரிடம் வழங்கிய பின்பு தான் அவர்கள் வகுப்பறைகளில் இணைக்கப்படுவர்.
கலைவகுப்புகள் – சனிக்கிழமை
கலை வகுப்புகள் வழமை போல் மீண்டும் 30.08.25 ஆரம்பமாகும்.
நேர விபரங்கள் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.
மழலையர், சிறுவர்கள் தாம் விரும்பும் கலை வடிவத்தை (பரதநாட்டியம், சங்கீதம் மற்றும் ஊரக கலைகள் (freestyle) இலவசமாக கற்றுத் தரப்படும். இதற்காக வளர்ந்து வரும் இளம் கலை ஆசிரியர்களை நியமித்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதற்காக பரதக்கலை கற்ற இளம் கலை ஆசிரியர்களை நியமித்துள்ளோம். இவர்கள் ஊடாக பயிற்சி பெறும் மாணவர்களை எமது பாடசாலை தாண்டி வெளி அரங்குகளிலும் அனுமதியோடு மேடை ஏற்ற எண்ணியுள்ளோம்.உதாரணமாக லோறன்ஸ்கூக் மாநகரசபை நிகழ்வுகளிலும் மற்றும் ஏனைய ஆரோக்கியமான நிகழ்வுகளிலும்.
அன்பான பெற்றோர்களே!
ஆர்வத்தோடு உங்கள் பிள்ளைகளை இணைத்து பயனடைந்து கொள்ளுங்கள்
தகவல்கள் கூட்டம்
பெற்றோர்களுக்கான தகவல்கள் கூட்டம் 30.08.2025 காலை 09:45 மணிக்கு
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்