லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 48 – 2026

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!   

🔗ஒலிவடிவம் - வாரந்தரதகவல்

🎓கல்வி – 28.11.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)

வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

 

 

 

திருக்குறள்  போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள்.

🔗இணைப்பை அழுத்தவும்

தேசிய அளவிலான திருக்குறள் போட்டியில் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்று, தங்களது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்திய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

👏🏼🏆🥇 இப்போட்டியில் பங்கேற்கத் தங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும், சிறப்பாக வழிகாட்டி மாணவர்களைத் தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

 

🎶கலைவகுப்புகள்

வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.

 

 

மாவீரர் நாள் நினைவேந்தல்

முக்கிய அறிவித்தல்!

அன்பார்ந்த தமிழ் உறவுகளே,

நலன்விரும்பிகள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கும், கருத்திற்கொண்ட நல்லெண்ணத்திற்கும் மதிப்பளித்து, இவ்வாண்டு தமிழர் வள ஆலோசனை மைய மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்த பொது வணக்க நிகழ்வில் முக்கிய மாற்றமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் பின்னணி மற்றும் விரிவான விளக்கங்கள் அடங்கிய முழுமையான உத்தியோகபூர்வ அறிக்கை இத்துடன் PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் அதனை முழுமையாக வாசித்துத் தெளிவுபெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இணைப்பைப் பார்க்கவும்:

https://annai.no/wp-content/uploads/2026/11/brev_maveerar_arikkai_v3.pdf

"தமிழ் எங்கள் அடையாளம்"

இவ்வண்ணம்
தலைமை நிருவாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்

 

 

 

 

ℹ️ ஆண்டுத்திட்டம் 2026/2027

அன்னை ஆண்டு திட்டத்தில் மாற்றம் வந்தால் எங்கள் வளாகத்திலும் மாற்றம் வரலாம்”

🔗இணைப்பை அழுத்தவும்

 

 

 

ℹ️ 25வது ஆண்டு விழா மலர்க் குழுவின் அறிவிப்பு

அன்பார்ந்த பெற்றோர்களே,

எமது 25வது ஆண்டு விழா மலரில் மாணவர்களின் குழு நிழற்படங்களை இடம்பெறச் செய்வதற்காக, மாணவர்களுக்கு வெளியில் குழு நிழற்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தேதி: 12.12.2026

அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து குழுப் புகைப்படம் (Group Photo) எடுக்கப்பட உள்ளது. தங்களது பிள்ளைகள் இப்புகைப்படத்தில் இடம்பெறுவதற்கு விருப்பமில்லையெனில், தயவுசெய்து முன்கூட்டியே பாடசாலை நிர்வாகத்திடம் அறியத்தரவும்.
இப்புகைப்படம் எமது பாடசாலையின் வரலாற்றுப் பதிவாக நீண்ட காலம் பாதுகாக்கப்பட்டு, எதிர்கால சந்ததியினரும் நினைவுகூரும் ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கும்.

 

 

 

 

📌 நிதி 2026

தவணைக் கட்டணம் (faktura) கட்டாதவர்கள் கவனயினத்தால் மறந்தவர்கள் கட்டணத்தை செலுத்தி, பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

 

📌 மாணவர்கள் அனைவரின் கவனத்திற்கு
வகுப்புகளுக்குச் செல்லும் போது, அனைவரும் உள்ளகப் பயன்பாட்டிற்கான பாதணிகளை (innesko) அணிந்து வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இனிவரும் காலங்களில் ஆசிரியர்கள் இதுகுறித்து மேலும் கவனம் செலுத்துவார்கள்.

 

📢 வாகனம் நிறுத்தும் போது, உங்கள் வாகனத்தை பதிவு செய்ய மறக்க வேண்டாம்.

 

 

📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்

  • 05.12.2026 அரையாண்டு பரீட்சை
  • 19.12.2026  நத்தார் விழா

 

 

 குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

 

🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕

🍽️உணவுகளை முன்பதிவு செய்ய Kantina இணைப்பை அழுத்தவும்

https://kantina.aptkl.no/

 

 

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

 

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்