லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 47 – 2026

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!   

🔗ஒலிவடிவம் - வாரந்தரதகவல்

🎓கல்வி – 21.11.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)

வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

 

📢அன்பார்ந்த பெற்றோர்களே,

அன்னை பூபதி லோறன்ஸ்கோக் வளாகத்தின் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இணைந்து Lørenskog kommune-க்கு ஒரு கையொப்ப மனுவை முன்னெடுத்து வருகின்றோம்.

எமது பிள்ளைகள் கல்வி பயிலும் நேரங்களில், எங்களது வாகனங்களுக்கும் Lørenskog kommune ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதே Parkering கட்டண வசதி மற்றும் சலுகை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

எனவே, அனைத்து பெற்றோர்களும் கீழ்க்காணும் இடத்தில் நடைபெறும் கையொப்பச் சேகரிப்பில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

📅 தேதி: 21.11.2026

🕒 நேரம்: 9:30- 12:30

📍 இடம்: அன்னை பூபதி லோறன்ஸ்கோக் வளாகம்


எமது பிள்ளைகளின் நலனுக்காக அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கையொப்பமிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

 

 

திருக்குறள்  போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள்.

🔗இணைப்பை அழுத்தவும்

தேசிய அளவிலான திருக்குறள் போட்டியில் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்று, தங்களது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்திய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

👏🏼🏆🥇 இப்போட்டியில் பங்கேற்கத் தங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும், சிறப்பாக வழிகாட்டி மாணவர்களைத் தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

 

🎶கலைவகுப்புகள்

வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.

 

 

மாவீரர் நாள் நினைவேந்தல்

 

 

 

 

 

ℹ️ ஆண்டுத்திட்டம் 2026/2027

அன்னை ஆண்டு திட்டத்தில் மாற்றம் வந்தால் எங்கள் வளாகத்திலும் மாற்றம் வரலாம்”

🔗இணைப்பை அழுத்தவும்

 

 

 

ℹ️ 25வது ஆண்டு விழா மலர்க் குழுவின் அறிவிப்பு

அன்பார்ந்த பெற்றோர்களே,

எமது 25வது ஆண்டு விழா மலரில் மாணவர்களின் குழு நிழற்படங்களை இடம்பெறச் செய்வதற்காக, மாணவர்களுக்கு வெளியில் குழு நிழற்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தேதி: 12.12.2027

 

 

 

 

📌 நிதி 2026

தவணைக் கட்டணம் (faktura) கட்டாதவர்கள் கவனயினத்தால் மறந்தவர்கள் கட்டணத்தை செலுத்தி, பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

 

📌 மாணவர்கள் அனைவரின் கவனத்திற்கு
வகுப்புகளுக்குச் செல்லும் போது, அனைவரும் உள்ளகப் பயன்பாட்டிற்கான பாதணிகளை (innesko) அணிந்து வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இனிவரும் காலங்களில் ஆசிரியர்கள் இதுகுறித்து மேலும் கவனம் செலுத்துவார்கள்.

 

📢 வாகனம் நிறுத்தும் போது, உங்கள் வாகனத்தை பதிவு செய்ய மறக்க வேண்டாம்.

 

 

📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்

  • 21.11.2026 மாவீரர் நாள் நினைவேந்தல்
  • 05.12.2026 அரையாண்டு பரீட்சை
  • 19.12.2026  நத்தார் விழா

 

 

 குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

 

🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕

🍽️உணவுகளை முன்பதிவு செய்ய Kantina இணைப்பை அழுத்தவும்

https://kantina.aptkl.no/

 

 

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

 

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்