வணக்கம்!
🎓கல்வி – 17.10.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
📢எமது வளாகத்தில் நடைபெறவுள்ள நவராத்திரி விழாவையொட்டி, ஏடுதொடக்குதல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
📅 திகதி: 17.10.2026
அத்துடன், சங்கீதம், பரதநாட்டியம், சுரத்தட்டு மற்றும் கிற்றார் கற்க விரும்பும் புதிய மாணவர்களுக்கான பதிவு மற்றும் வகுப்பு தொடக்கமும் நடைபெறும். ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்..
குறிப்பு: • இவ்வாண்டு நவராத்திரி விழா எமது வளாகத்திலேயே நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்

🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
ℹ️எதிர்வரும் கார்த்திகை மாதம் நடைபெறவுள்ள போட்டிகள் தொடர்பான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
📖 திருக்குறள் போட்டி
📖அன்னை திருக்குறள் போட்டி
🎨 2. மாவீரர் ஓவியப்போட்டி
🌙 3. நிலாமுற்றப் போட்டி
நிலாமுற்றப் போட்டி தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
"மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றுத் தமது திறமைகளை வெளிப்படுத்த ஊக்கப்படுத்தமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் "
📌 நிதி 2026
தவணைக் கட்டணம் (faktura) கட்டாதவர்கள் கவனயினத்தால் மறந்தவர்கள் கட்டணத்தை செலுத்தி, பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ℹ️ ஆண்டுத்திட்டம் 2026/2027
அன்னை ஆண்டு திட்டத்தில் மாற்றம் வந்தால் எங்கள் வளாகத்திலும் மாற்றம் வரலாம்”
ℹ️ தகவல்:
29.09.2026 அன்று நடைபெற்ற தகவல் கூட்டத்தின் கூட்ட அறிக்கை (Referat)
📌 வாகனத்தரிப்பிடங்கள் கட்டணம் செலுத்தித் தரிப்பிட முடியும் என்று லோறன்ஸ்கூக் நகராட்சி முடிவெடுத்து எங்களுக்கும் தகவல் அனுப்பி வைத்திருக்கின்றது.
📢 வாகனம் நிறுத்தும் போது, உங்கள் வாகனத்தை பதிவு செய்ய மறக்க வேண்டாம்.
📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
ℹ️TRVS inviterer til Engelskkurs for skolelever!

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕
🍽️உணவுகளை முன்பதிவு செய்ய Kantina இணைப்பை அழுத்தவும்
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்