வணக்கம்!
அனைவரும் இலையுதிர் கால விடுமுறையை சிறப்பாக களித்திருப்பீர்கள் என நம்புகின்றோம்.
🎓கல்வி – 11.10.2025 சனிக்கிழமை - 09:30 -12:30 (10:45 - 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்
🪔 நிதி 2025
2025 ஆம் ஆண்டு அங்கத்துவ கட்டணம், அன்னை தலைமை நிர்வாகத்தால் அறவிடப்பட்டபடி, இன்னும் பலர் செலுத்தவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இன்னும் கட்டணம் செலுத்தாத அங்கத்தவர்கள் விரைவில் கட்டணம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும், கட்டணங்கள் செலுத்தாமல் நிலுவையில் உள்ள அங்கத்தவர்கள் கவனத்திற்கு —
கட்டணம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கணக்காளர் அல்லது பொறுப்பாளர் அவர்களை 21.10.2025 (சனிக்கிழமை)க்கு முன்னர் தொடர்பு கொள்ளவும். அவ்வாறு தொடர்பு கொள்ளத் தவறினால்,
நாங்கள் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை
மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
11.10.2025 - மழலையர் முற்றம்
18.10.2025 - திருக்குறள் தெரிவு போட்டி
25.10.2025 – தேசிய மட்டத்திலான திருக்குறள் போட்டி
26.10.2025 - அனைத்துலக அறிவாடல் போட்டி
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்