வணக்கம்!
கல்வி – சனிக்கிழமை (20.09.2025)- 09:30 -12:30 (10:45 - 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
நவராத்திரி விழா – 27.09.2025 சனிக்கிழமை
நவராத்திரி விழா நிகழ்ச்சிக்கான பயிற்சியை முன்னிட்டு, வகுப்பு ஆசிரியர்கள் தங்களின் பயிற்சி நேரங்களை அவர்களது Viber குழுமத்தில் தெரிவிப்பார்கள்.
அன்புடைய பெற்றோர்களே, ஆசிரியர்கள் அறிவிக்கும் நேரங்களில் குழந்தைகள் பயிற்சியில் பங்கேற்கும்படி தங்களின் ஒத்துழைப்பை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கலை வகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
பெற்றோர்களுக்கான தகவல்
Åsen பள்ளியிலிருந்து கடந்த சில வாரங்களாக, சுத்தம் பேணப்படவில்லை என்பதற்கான புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன. எனவே,
• பயன்படுத்திய இடங்களை சுத்தமாக வைத்திருக்கவும்,
• நாற்காலிகள் மற்றும் பொருட்களை எடுத்த இடத்திலிருந்து மீண்டும் அதே இடத்தில் வைத்து ஒழுங்கு பேணவும்,
உங்களின் ஒத்துழைப்பை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
27.09.2025 நவராத்திரி விழா
18.10.2025 திருக்குறள் போட்டி
08.11.2025 மாவீரர் ஓவியப்போட்டி
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்