வணக்கம்!
கல்வி – சனிக்கிழமை - 09:30 -12:30 (10:45 - 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
தியாக தீபம் திலீபனின் நினைவு சுமந்த புகைப்பட கண்காட்சி (11:30 – 12:30 )
தமிழ் இளையோர் அமைப்பினர் நடாத்தும் தியாக தீபம் திலீபனின் நினைவு சுமந்த புகைப்பட கண்காட்சி.
எதிர்வரும் 13.09.2025 சனிக்கிழமை 11.30 மணிக்கு ஓசன் பாடசாலை மேற் கட்டட கீழ்மாடி மண்டபத்தில் 5-11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு காண்பிக்கப்பட உள்ளது.
கலைவகுப்புகள் - சனிக்கிழமை
நவராத்திரி விழா சிறப்பு நடன நிகழ்ச்சி - வரவிருக்கும் நவராத்திரி விழாவை முன்னிட்டு, எமது வளாகத்தில் கலையார்வம் கொண்ட மாணவர்களை ஒன்றிணைத்து ஒரு சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
🎶 யார் கலந்து கொள்ளலாம்?
👉 6ஆம் வகுப்பு முதல் மேல்வகுப்பு வரை உள்ள மாணவர்கள்.
💃 எப்படி பங்கேற்பது?
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள், 18ம் திகதி வியாழக்கிழமைக்கு முன்னர் கலைப்பொறுப்பாளரை தொடர்பு கொள்ளவும்.
இந்த விழாவில் தங்களது திறமையை வெளிப்படுத்தி, நம் நவராத்திரி கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்குங்கள்!
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
27.09.2025 நவராத்திரி விழா
18.10.2025 திருக்குறள் போட்டி
08.11.2025 மாவீரர் ஓவியப்போட்டி
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்