வணக்கம்!
கல்வி – சனிக்கிழமை - 09:30 -12:30 (10:45 - 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
புதிதாக இணையவிருக்கும் மாணவர்களை இணைப்பதற்கான படிவங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அப்படிவங்களை நிரப்பி அலுவலகப் பொறுப்பாளரிடம் வழங்கிய பின்பு தான் அவர்கள் வகுப்பறைகளில் இணைக்கப்படுவர்.
கலைவகுப்புகள் - சனிக்கிழமை
கலை வகுப்புகள் வழமை போல் மீண்டும் 30.08.25 ஆரம்பமாகும்.
நேர விபரங்கள் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.
மழலையர், சிறுவர்கள் தாம் விரும்பும் கலை வடிவத்தை (பரதநாட்டியம், சங்கீதம் மற்றும் ஊரக கலைகள் (freestyle) இலவசமாக கற்றுத் தரப்படும். இதற்காக வளர்ந்து வரும் இளம் கலை ஆசிரியர்களை நியமித்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதற்காக பரதக்கலை கற்ற இளம் கலை ஆசிரியர்களை நியமித்துள்ளோம். இவர்கள் ஊடாக பயிற்சி பெறும் மாணவர்களை எமது பாடசாலை தாண்டி வெளி அரங்குகளிலும் அனுமதியோடு மேடை ஏற்ற எண்ணியுள்ளோம்.உதாரணமாக லோறன்ஸ்கூக் மாநகரசபை நிகழ்வுகளிலும் மற்றும் ஏனைய ஆரோக்கியமான நிகழ்வுகளிலும்.
அன்பான பெற்றோர்களே!
ஆர்வத்தோடு உங்கள் பிள்ளைகளை இணைத்து பயனடைந்து கொள்ளுங்கள்
தகவல்கள் கூட்டம்
பெற்றோர்களுக்கான தகவல்கள் கூட்டம் 30.08.2025 காலை 09:45 மணிக்கு
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்