லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 24– 2026

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!   

 

🎓கல்வி – 13.06.2026 சனிக்கிழமை – 09:30 -10:45

ℹ️வழமையான நேரத்தில் ஆரம்பித்து இடைவேளை வரை நடைபெறும்

என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்றுடன் கோடை விடுமுறை ஆரம்பமாகும்.    

 

கோடை விடுமுறைக்குப் பிறகு, பாடசாலை மீண்டும் 22.08.2026 அன்று வழமையான வகுப்புகளுடன் , வழமையான நேரத்தில் ஆரம்பமாகும்.

அனைவருக்கும் இனிய, மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான கோடை விடுமுறை வாழ்த்துக்கள்.  ☀️🏖️🌊🍉🌴😎🌺🍹🌼🦩

 

06.06.2026 அன்று நடைபெற்ற கோடைகால ஒன்றுகூடலை சிறப்பாக ஏற்பாடு செய்து, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மறக்கமுடியாத இனிய அனுபவமாக மாற்றிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பாக, இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த பெரும் பங்களிப்புச் செய்த பெற்றோர் குழு உறுப்பினர்கள் மற்றும் தேநீர்ச்சாலை நண்பர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகள். 🙏✨💖

 

🎶கலைவகுப்புகள்

வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.

 

📌 நிதி 2026

தவணைக் கட்டணம் (faktura) ஏற்கனவே அனைவருக்கும் அனுப்பப்பட்டிருப்பதால் நிர்ணயிக்கப்பட்ட திகதிக்குள் கட்டணத்தைச் செலுத்தி, பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ℹ️அங்கத்தவர் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் கட்டணத்தை செலுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்ளப் படுக்கின்றார்கள்.

 

 

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

ℹ️தேனீர்ச்சாலை நடைபெறாது 

 

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்