லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 24 – 2025 – med lydopptak

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 14.06.2025 Ukasinfo 24-2025

கடந்த வாரம் அனைத்துலக ஆண்டிறுதித் தேர்வு 2025 மிகச்சிறப்பாக நடைபெற்றது. வேறு வளாகங்களிலிருந்து தேர்வுக்காகப் பணியாற்ற வந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது நன்றி.

கல்வி

பாடசாலை வழமைபோல் 09.30 மணிக்கு ஆரம்பமாகும். இவ்வாரம் மாணவர்களுக்கான ஆண்டிறுதி பரீட்சை தேர்வுதாளும் தேர்ச்சி அறிககையும் வழங்கப்படும்.

அன்னை பூபதி லோறன்ஸ்கூக் வளாகத்தின் கல்வியாண்டு 2024-2025 எதிர்வரும் 15.06.2025 விளையாட்டு விழாவுடன் நிறைவு பெறுகின்றது என்பதனை அறியத்தருவதோடு அனைவருக்கும் கோடைகால விடுமுறை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துநிற்கின்றோம்.

அடுத்த கல்வியாண்டுத் தொடக்கம் 23.08.2025 என்பதனையும் அறியத்தருகின்றோம்.

மேலதிக தமிழ் கற்கை நெறி வகுப்புகள் வெள்ளிகிழமைகளில் 18:00 – 19:00 மணி வரை நடைபெறும்.

கலைவகுப்புகள்
வழமைபோல் வழங்கப்பட்ட நேரத்தில் நடைபெறும். மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.

விளையாட்டு விழா 2025 15.06.2025
விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான குறிப்புகள்:
* அனைத்துப் போட்டிகளும் வழமையான முறையில் நடைபெறும்.
* *தனிநபர் விளையாட்டுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படாது.
* *குழு விளையாட்டுகளுக்கு மட்டுமே புள்ளிகள் வழங்கப்படும்.
* *இல்லங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படாது.

பதக்கங்கள் மற்றும் பரிசுகள்:
*தொடர்நிலை, மழலையர், சிறுவர் நிலை மாணவர்கள்:
* * பங்கேற்கும் அனைவருக்கும் பதக்கம் வழங்கப்படும்.

*முதலாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை:
* * பங்கேற்கும் அனைவருக்கும் பொதுப் பதக்கம் வழங்கப்படும்.
* *1ம், 2ம், 3ம் இடம் பெறுவோருக்கு கூடுதல் பதக்கம் வழங்கப்படும்.

*ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை:
* *1ம், 2ம், 3ம் இடம் பெறுவோருக்கு மட்டுமே பதக்கம் வழங்கப்படும்.
* * பங்கேற்கும் அனைவருக்கும் பொதுப் பதக்கம் வழங்கப்படாது.
*வெற்றிக்கிண்ணம் யாருக்கும் வழங்கப்படாது.

* பரிசுகள் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களால் வழங்கப்பட்டு, மாணவர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

*பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான குழு விளையாட்டுகள்:
* காயிறு இழுத்தல்
* தேசிக்காய் ஓட்டம்
* அஞ்சல் ஓட்டம்

*இடைவேளை மற்றும் உணவு நேரம்:
* *இடைவேளை:* பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரை. இந்நேரத்தில் அனைவருக்கும் (மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்) உணவு வழங்கப்படும்.

இந்த விழா தொடர்பான தகவல்களை பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கவனத்தில் கொண்டு, «ஆர்வத்துடனும் ஒத்துழைப்புடனும் பங்கேற்குமாறு» கேட்டுக் கொள்கிறோம்.


நிதி 2025
Vår 2025 தவணை கட்டணத்தை விரைவில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்தி செல்லவும்.
அத்துடன், 2025 கான அன்னை அங்கத்தவர் கட்டணம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது – தயவுசெய்து அதையும் விரைவில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
15.06.2025 விளையாட்டு விழா

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
Ukasinfo_24-2025 pdf