லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 23– 2026

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!   

 

🎓கல்வி – 06.06.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)

வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

 

✍️06.06.2026 அனைத்துலக பொதுத்தேர்வு

இடம்: தமிழர் வள ஆலோசனை மையம் ரொம்மென் (Nedre Rommen 3 , 0988 Oslo)

நேரம்: 10:00 - 13:00

ℹ️ மேலதிக தகவல்:

பதிவு செய்த மாணவர்கள் காலை 10:00 மணிக்கு இரண்டாம் மாடியில் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

 

🎶கலைவகுப்புகள்

வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.

 

📌 நிதி 2026

தவணைக் கட்டணம் (faktura) ஏற்கனவே அனைவருக்கும் அனுப்பப்பட்டிருப்பதால் நிர்ணயிக்கப்பட்ட திகதிக்குள் கட்டணத்தை செலுத்தி, பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

📢 விளையாட்டுப் போட்டி – நன்றிக்குறிப்பு

அன்னை பூபதி தமிழ் கலைக்கூடம், லோறன்ஸ்கூக் வளாகம் சார்பாக நடைபெற்ற மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2026 அனைவரின் ஒத்துழைப்புடனும் உற்சாகத்துடனும் மிகச் சிறப்பாக நிறைவடைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த விளையாட்டுப் போட்டி இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதற்குப் பின்னால் இருந்த ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது. இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த அயராது உழைத்த நிர்வாக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மாணவர்கள், தேநீர்ச்சாலை குழுவினர், பெற்றோர் குழுவினர், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் விளையாட்டுப் பொறுப்பாளர் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த கௌரவமிக்க பிரதம விருந்தினருக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

மேலும், தங்கள் பிள்ளைகளை ஊக்குவித்து போட்டி நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்த மதிப்பிற்குரிய பெற்றோர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் அனைவரின் பேராதரவே இப்போட்டியின் வெற்றிக்கு வலுசேர்த்தது.

குறிப்பு: விளையாட்டுப் போட்டியின்போது வெற்றிச் சான்றிதழைப் பெறாத மாணவர்கள் விளையாட்டுப் பொறுப்பாளரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு இலக்கம்: 41673165

அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகள்.

 

இப்படிக்கு,

ஆ.குணேந்திரன்

விளையாட்டுப் பொறுப்பாளர்

 

 

📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்

📌 06.06.2026 :  அனைத்துலக பொதுத்தேர்வு

ℹ️அனைத்துலகத் தேர்வு முடிந்தவுடன், 06.06.2026 அன்று மதியம் 12:30    மணிக்கு கோடை நிறைவு விழாவிற்கான 🥳Grillfest 🥳     ஆரம்பமாகும்.  எல்லோரும் கலந்து சிறப்பிக்கவும்.

 

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

 

ℹ️கோடைகால விழா நடைபெறுவதால் இவ்வாரம் தேனீர்ச்சாலை நடைபெறாது 

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்