லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 23 – 2025 – med lydopptak

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 07.06.2025 Ukasinfo 23-2025

கடந்த வாரம் 10ஆம் வகுப்பு தலைமையில் நடைபெற்ற தேநீர்ச்சாலை மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது. இதை சிறப்பாக வழி நடத்தி பேருதவி புரிந்த 10ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கும் மற்றும் மிகுந்த ஆர்வத்தோடு செய்து முடித்த மாணவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

கல்வி
தொடக்கநிலை, மழலையர் மற்றும் சிறுவர்நிலை மாணவர்களுக்கு வழமையான பாடசாலை இடம்பெறும்.

1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 07.06.2025 சனிக்கிழமை அனைத்து உலகத் தேர்வு நடைபெற இருப்பதால் மாணவர்களுக்கு இடைவேளை இன்றி தேர்வு நடைபெறும். ஆகவே பிள்ளைகளுக்கு உணவுப் பொதி மற்றும் நீர் புத்தகப் பையுடன் கொடுத்து அனுப்பவும். அனைத்துலக பரீட்சையில் அனைத்து மாணவர்களும் பங்குபற்றுகின்றார்கள்.

மேலதிக தமிழ் கற்கை நெறி வகுப்புகள் வெள்ளிகிழமைகளில் 18:00 – 19:00 மணி வரை நடைபெறும்.

கலைவகுப்புகள்
வழமைபோல் வழங்கப்பட்ட நேரத்தில் நடைபெறும். மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.

விளையாட்டு போட்டி 2025
விளையாட்டு விழா 15.06.25 அன்று இடைவேளையின் போது உடற்பயிற்சி (drill) செய்ய ஒழுங்கு செய்துள்ளோம். அதில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் (ஆண், பெண் இருபாலரும் ) இப்படிவத்தை நிரப்பி நாளை இரவு 20.00 மணிக்கு முன்பாக அனுப்பி விடவும்.

களநிலை/நடன நிகழ்ச்சிக்கான மாணவர் பதிவு படிவம் - விளையாட்டு விழா - APTK-Lørenskog

விளையாட்டு போட்டி பயிற்சிகள் (1-10ஆம் வகுப்பு):
இடம்: Lillestrøm Stadion.
வியாழக்கிழமை 05.06.2025 மணி 17:30-19:00
ஞாயிற்றுக்கிழமை 08.06.2025 மணி 17:30-19:00
செவ்வாய்க்கிழமை 10.06.2025 மணி 17:30-19:00
வியாழக்கிழமை 12.06.2025 மணி 17:30-19:00

குறிப்பு: காலநிலை மாற்றம் ஏற்படுமாயின் (மழை என்றால்) பயிற்சி நிறுத்தப்படலாம்.


நிதி 2025

Vår 2025 தவணை கட்டணத்தை விரைவில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்தி செல்லவும்.
அத்துடன், 2025 கான அன்னை அங்கத்தவர் கட்டணம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது – தயவுசெய்து அதையும் விரைவில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
07.06.2025 அனைத்துலகத் தமிழ் எழுத்துத்தேர்வு
14.06.2025 பாடசாலை கடைசி நாள்
15.06.2025 விளையாட்டு விழா

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
Ukasinfo_23-2025 pdf