வணக்கம்!
🎓கல்வி – 30.05.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
ℹ️30.05.2026: ஆண்டிறுதி பொதுத்தேர்வு இருப்பதால் மாணவர்கள் பாடசாலைக்கு 9:15 மணிக்கு வருகை தந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தேர்வு இருப்பதால் இடைவேளை இல்லை.
பெற்றோர்கள்தான் சிற்றுண்டிசாலையில் பிள்ளைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கவேண்டும் / பிள்ளைகள் வீட்டில் இருந்து கொண்டுவர வேண்டும்.
✍️ 30.05.2026: ஆண்டிறுதிப்பொதுதேர்வு
ℹ️ மேலதிக தகவல்: ஆண்டு 6 - 10, பகுதி 1 இணையவழியில் நடைபெறுவதால் அனைத்து மாணவர்களும் தொலைபேசி, கணினி அல்லது nettbrett கொண்டுவரவும்.
✍️06.06.2026 அனைத்துலக பொதுத்தேர்வு
விண்ணப்பித்த மாணவர்களுக்கு தமிழர் வள ஆலோசனை மையத்தில் தேர்வு இடம்பெறும், ஏனைய மாணவர்களுக்கு வழமை போல் பாடசாலை நடைபெறும்
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
📌 நிதி 2026
தவணைக் கட்டணம் (faktura) ஏற்கனவே அனைவருக்கும் அனுப்பப்பட்டிருப்பதால் நிர்ணயிக்கப்பட்ட திகதிக்குள் கட்டணத்தை செலுத்தி, பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
🏆விளையாட்டுப் போட்டி 2026

TBUK கட்டணம் செலுத்தியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான விளையாட்டுகளில் கலந்து கொள்ள இந்தப் படிவத்தை பயன்படுத்தவும்.
👉 https://poopathi.no/aptk/sport/index.php
இப்படிவத்தில் உள்நுழையும் போது வேலை செய்யவில்லை என்றால், தொடர்பு கொள்ளவும் - 41673165 (விளையாட்டு பொறுப்பாளர்)
31.05.2026 அன்று நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி நேரங்கள்:
⏱️ வியாழக்கிழமை (28.05.2026) – மாலை 18:00 முதல் 19:30 வரை
🤸 பயிற்சிகள் Lillestrøm idrettsbane, Leiraveien 2 இல் நடைபெறும்.
குறிப்பு: காலநிலை மாற்றம் ஏற்பட்டால் (மழை என்றால்), பயிற்சி நிறுத்தப்படலாம்
தங்கள் பிள்ளைகள் சேர்ந்திருக்கும் விளையாட்டுகளைப் பார்க்க விரும்பும் பெற்றோர்கள், இந்த இணைப்பைப் பயன்படுத்தலாம்.
👉 https://aptkl.netlify.app/sports-day.html
முழுமையான உறுப்பினர் பட்டியல் (இல்ல விவரங்களுடன்)
வயது அடிப்படையில் விளையாட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன, அதற்கான அட்டவணையும் கீழே இணைக்கப்பட்டுள்ளது

📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
📌30.05.2026: ஆண்டிறுதிப்பொதுதேர்வு
📌 31.05.2026 - விளையாட்டுப் போட்டி 2026
📌 06.06.2026 : அனைத்துலக பொதுத்தேர்வு
ℹ️அனைத்துலகத் தேர்வு முடிந்தவுடன், 06.06.2026 அன்று மதியம் 12:30 மணிக்கு கோடை நிறைவு விழாவிற்கான Grillfest ஆரம்பமாகும்.
எல்லோரும் கலந்து சிறப்பிக்கவும்.
Grillfest 23-05-2026 நடாத்தப்பட்ட தகவல் கூட்டத்தில் பெரும்பான்மை பெற்ரோர்களின் விருப்பத்துக்கு அமைய 06.06.2026 நாடாத்த முடிவெடுக்கப்பட்டது.
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்