வணக்கம்!
வாராந்தத் தகவல் 24.05.2025 Ukasinfo 21-2025
24.05.2025 சனிக்கிழமை அன்று பாடசாலை காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகும்.
16 வது ஆண்டு இனவழிப்பு நாள் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகி நினைவேந்தல் நிறைவில் அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படும். அனைவரும் கறுப்பு வெள்ளை உடை அணிந்து வந்தால் சிறப்பு.
கல்வி
09.30 மணிக்கு அன்னை பூபதி தமிழ்க் கலைகூடத்தின் ஆண்டிறுதிப் பொதுத்தேர்வு ஆரம்பமாகும்.
மேலதிக தமிழ் கற்கை நெறி வகுப்புகள் வெள்ளிகிழமைகளில் 18:00 – 19:00 மணி வரை நடைபெறும்.
ஆண்டுறுதித் தேர்வுகள் 2025 விவரம் :
எழுத்துத் தேர்வுகள்:
அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் ஆண்டிறுதித் தேர்வு 07.06.2025 சனி நடைபெறும்.
எதிர்வரும் 07.06.2025 அன்று அனைத்துலக தேர்வு பரீட்சை நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே.
கலைவகுப்புகள்
வழமைபோல் வழங்கப்பட்ட நேரத்தில் நடைபெறும். மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.
விளையாட்டு போட்டி 2025
24.05.2025 சனிக்கிழமை பெற்றோருக்கான தகவல் கூட்டம் 10-10.45 மணி வரை மேற்கட்டட மேல் மண்டபத்தில் நடைபெறும்.
இவ்வருட விளையாட்டுப் போட்டியில் உங்கள் பிள்ளைகள் இணைந்து கொள்வதற்கான அங்கத்துவப் பணம் 50 குறோணர்களை TBUK விற்கு 25.05.2025 முன் செலுத்தி பதிவு செய்து கொள்ளும் வண்ணம் பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.
இதற்கான இணைப்பு கீழே உள்ளது.TBUK கட்டணவிபரங்கள் - https://medlemskap.nif.no/202173
நிதி 2025
Vår 2025 தவணை கட்டணத்தை விரைவில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்தி செல்லவும்.
அத்துடன், 2025 கான அன்னை அங்கத்தவர் கட்டணம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது – தயவுசெய்து அதையும் விரைவில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
31.05.2025 10ம் வகுப்பு மாணவர்களின் தேநீர்ச்சாலை
07.06.2025 அனைத்துலகத் தமிழ் எழுத்துத்தேர்வு
14.06.2025 கோடைகால ஒன்று கூடல் / பாடசாலை கடைசி நாள்
15.06.2025 விளையாட்டுப் போட்டி
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
Ukasinfo_21-2025 pdf