லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 20 – 2026

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!   

நோர்வேயின் 17மே கொண்டாட்டம் காரணமாக 16.05.26 அன்று அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் லோறன்ஸ்கூக் நடைபெறமாட்டாது.

 

அன்னையின் புலன்மொழி தேர்வு விபரங்கள் – இணைப்பை பார்க்கவும்

ℹ️அனைத்துலக பொதுத்தேர்வு பற்றிய அன்னை தலைமையின் தகவல்:

ℹ️அனைத்துலக ஆண்டிறுதிப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் TRVS கட்டிடத்தில் தேர்வு எழுதலாம். மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, எங்கள் பாடசாலையில் தேர்வை நடத்தலாமா என்பது குறித்து பின்பு அறியத்தரப்படும்.

.🕧காலம்: 06.06.2026

📍இடம்: தமிழர் வள ஆலோசனை மையம்

மாணவர்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பபடிவம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.   👉விண்ணப்பபடிவம்

விண்ணப்ப முடிவு 17.05.2026

 

ℹ️ புலன்மொழித் தேர்வு எப்போது நடைபெறும் என்று அன்னையிடம் கேட்டபோது, கடந்த வாரம் நடைபெற்ற புலன்மொழிப் பரீட்சையின் பெறுபேறுகளை அனைத்துலகத்திற்கு பதிவு செய்யுமாறு கூறினார்கள்

 

 

🏆விளையாட்டுப் போட்டி 2026

TBUK கட்டணம் செலுத்தியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான விளையாட்டுகளில் கலந்து கொள்ள இந்தப் படிவத்தை பயன்படுத்தவும்.

👉 https://poopathi.no/aptk/sport/index.php

இப்படிவத்தில் உள்நுழையும் போது வேலை செய்யவில்லை என்றால்,  தொடர்பு கொள்ளவும் -  41673165 (விளையாட்டு பொறுப்பாளர்)

31.05.2026 அன்று நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி நேரங்கள்:

⏱️ செவ்வாய்க்கிழமை (19.05.2026) – மாலை 18:00 முதல் 19:30 வரை

⏱️ வியாழக்கிழமை (21.05.2026) – மாலை 18:00 முதல் 19:30 வரை

🤸 பயிற்சிகள் Lillestrøm idrettsbane, Leiraveien 2 இல் நடைபெறும்.

குறிப்பு: காலநிலை மாற்றம் ஏற்பட்டால் (மழை என்றால்), பயிற்சி நிறுத்தப்படலாம்

 

தங்கள் பிள்ளைகள் சேர்ந்திருக்கும் விளையாட்டுகளைப் பார்க்க விரும்பும் பெற்றோர்கள், இந்த இணைப்பைப் பயன்படுத்தலாம்.

👉 https://aptkl.netlify.app/sports-day.html

 

வயது அடிப்படையில் விளையாட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன, அதற்கான அட்டவணையும் கீழே இணைக்கப்பட்டுள்ளது

📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்

📌 23.05.2026 : இன அழிப்புநாள் நினைவுகூரல். நினைவுகூரலின் பின் வழமையான பாடசாலை நடைபெறும்

📌 23.05.2026 இடைவேளைக்கு பின் பெற்றோர்களுக்கான தகவல் கூட்டம் நடைபெறும்

📌30.05.2026: ஆண்டிறுதிப்பொதுதேர்வு

📌 31.05.2026 - விளையாட்டுப் போட்டி 2026

📌 06.06.2026 :  அனைத்துலக பொதுத்தேர்வு

 

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்